இரட்டை சதம் அடித்த இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு… தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு !

தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 5  டி.20 போட்டிகள் கொண்ட தொடைரிலும் பங்கேற்கிறது.

பிப்ரவரி மாதம் 5ம் தேதி துவங்கி பிப்ரவரி 24ம் தேதி நடைபெற உள்ள இந்த தொடருக்கான பயிற்சி போட்டி பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று(ஜனவரி 10) அறிவித்துள்ளது.

பெண்களுக்கான உலக்ககோப்பையில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற மிதாலி ராஜ் இந்திய அணியில், ஹர்மன்ப்ரீட் கபூர் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தனியா பாட்டியாவை எடுத்துள்ளது பி.சி.சிஐ. இவர் 2017 பெண்களுக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்.

அதே போல் சவுராஸ்டிரா அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக 202 ரன்கள் விளாசிய ரோடிகியூஸிற்கும் பி.சி.சி.ஐ., இந்த முறை வாய்ப்பு வழங்கியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ஸ்மிரிதி மந்தனாவிற்கு அடுத்தபடியாக இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரராவார்.

அட்டவணை;

பிப்ரவரி 5 – முதல் ஒருநாள் போட்டி

பிப்ரவரி 7 – இரண்டாவது ஒருநாள் போட்டி

பிப்ரவரி 10- மூன்றாவது ஒருநாள் போட்டி

பிப்ரவரி 13 – முதல் டி.20 போட்டி

பிப்ரவரி 16 – இரண்டாவது டி.20 போட்டி

பிப்ரவரி 18 –மூன்றாவது டி.20 போட்டி

பிப்ரவரி 21 –நான்காவது டி.20 போட்டி

பிப்ரவரி 24 –ஐந்தாவது டி.20 போட்டி

இந்திய பெண்கள் அணி;

மிதாலி ராஜ்(கேப்டன்), ஹர்மன்ப்ரீட் கவூர், சுஷ்மா வெர்மா, எக்டா பிஸ்ட், ஸ்மிரிதி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ராட், ராஜேஸ்வரி காயேக்வட், ஜெமினாஹ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, சிக்ஸார் பாண்டே, மோனா மெஸ்ரம், புஜா வெஸ்ட்ரேகர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தான்யா பாட்டியா.

Mohamed:

This website uses cookies.