ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய பெண்களுக்கு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை போல் கடந்த இந்த மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, இரண்டு தொடரையும் கெத்தாக கைப்பற்றி நாடு திரும்பியுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இதற்காக அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டியும் வதோத்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணி;
மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீட் கவூர், ஸ்மிர்தி மந்தனா, பூணம் ராவத், ஜெரிமியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மெஸ்ரம், சுஷ்மா வெர்மா, ஈகா பிஸ்ட், பூணம் யாதவ், ராஜேஸ்வரி, சிகா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா வஸ்தர்கர், தீப்தி சர்மா.
போட்டி அட்டவணை;
12.3.18 | முதல் ஒருநாள் போட்டி | வதோத்ரா |
15.3.18 | இரண்டாவது போட்டி | வதோத்ரா |
18.3.18 | மூன்றாவது ஒருநாள் போட்டி | வதோத்ரா |