இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 3 டி20 போட்டி விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக இந்திய அணியால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனவே அந்த தொடர் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் நடக்க இருந்தது.
இந்நிலையில் அந்த தொடர் தற்பொழுது வருகிற செப்டம்பர் மாதமே நடக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்சட் தற்பொழுது கூறியிருக்கிறார். அவர் கூறியதில் செப்டம்பர் மாதம் இந்திய மகளிர் அணிக்கு எதிராக டி20 போட்டிகள் நடக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பிக் பாஷ் லீக், அதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து ஆஷஸ், அதனைத் தொடர்ந்து உலககோப்பை மற்றும் அதனை தொடர்ந்து இறுதியாக காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருப்பதால் இனி தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட போவதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார் மேகன் கூறியிருக்கிறார்.
சென்றமுறை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய டி20 போட்டி
சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகள் உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் மோதின. எம் சி ஜி மைதானத்தில் கிட்டத்தட்ட 80,000 பேர் கொண்ட ரசிகர்கள் இந்த போட்டியை காண வந்திருந்தனர். ஒரு மகளிரணி போட்டிக்கு இவ்வளவு ராசிகள் வருவது அதுதான் முதல்முறை. இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய அளவில் தோல்வி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
எனவே வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் 3 டி20 போட்டிகளில் இந்தியா மிக சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை பறித்து இருக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
சரிவில் இருந்து மீளுமா இந்திய மகளிர் அணி
மேலும் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய மகளிர் அணி மிக மோசமாக விளையாடி தொடரை கைவிட்டது. தற்போது இந்திய மகளிர் அணிக்கு ரமேஷ் பவார் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய மகளிர் அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
அங்கு ஜூன் 16-ஆம் தேதி ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து விட்டு ஜூலை 15ஆம் தேதி மொத்தமாக தொடரை இந்திய மகளிர் அணி முடிக்க காத்திருக்கிறது.
100 டோர்னமெண்ட் மற்றும் பிக் பாஷ் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் இந்திய மகளிர் அணி வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் முடிந்தவுடன் இந்திய மகளிர் அணியில் ஹர்மன்பிரீத் கார், ஸ்மிருதி மந்தனா, ஜெம்மையா, ஷாபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் இங்கிலாந்தில் தங்க இருக்கின்றன. ஜூலை 21 தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்க இருக்கும் ஹன்றட் டோர்னமெண்ட் விளையாட அவர்கள் அங்கு இருக்கப்போவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஷாபாலி வர்மா மற்றும் ராதா யாதவ் மகளிருக்கான பிக் பாஷ் லீக்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.