வங்கதேசத்தை பஞ்சாக பறக்கவிட்டு அரைஇறுதிக்குள் நுழைந்த இந்தியா!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 104 (92), கே.எல்.ராகுல் 77 (92) மற்றும் ரிஷாப் பண்ட் 48 (41) ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

கடைசிஓவரில் தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புவனேஷ்வர் குமார்(2), ஷமி(1) என ஆட்டமிழந்தனர் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது.

வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீ்ச்சுக்கு தொடக்கத்தில் இருந்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறியதால், ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 22 ரன்னில் தமிம் இக்பால் ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 39 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது

அடுத்துவந்த சகிப் அல் ஹசன், சர்்க்காருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். பாண்டியா பந்துவீச்சில் சர்க்கார் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வி்க்கெட்டுக்கு களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம்(24), அடுத்துவந்த லி்ட்டன் தாஸ்(24), மொசாடக் ஹூசைன்(3) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர்.

 

விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ வீரர் சகிப் அல்ஹசன் 58 பந்துகளில் அரைசதம் அடித்து 66 ரன்னில் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.

7-வது விக்கெட்டுக்கு சபீர் ரஹ்மானும், சைபுதீனும் ஓரளவுக்கு நிலைத்து ஆடிய ஸ்கோரை உயர்த்தினர். இந்த 66 ரன்கள் சேர்த்துப்பிரிந்தது. சபீர் ரஹ்மான் 31 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த மோர்தசா(8), ருபெல் ஹூசைன்(9), முஸ்தபிசுர்(0)என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுக்க 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் அணி ஆட்டமிழந்தது. சைபுதீன் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 13 புள்ளிகளை எட்டி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சு அபாரம், அனைவருமே அற்புதமாக வீசினர். புவனேஷ்வர் குமார் 9 ஓவர் 51 ரன்1 விக்கெட். ஷமி 9 ஓவர் 68 ரன் 1 விக்கெட். சாஹல் 10 ஓவர் 50 ரன் 1 விக்கெட். ஹர்திக் பாண்டியா மிகப் பிரமாதம் 10 ஓவர் 60 ரன் 3 விக்கெட். பும்ரா மிகமிகப் பிரமாதம் 55 ரன்களுக்கு 4 விக்கெட்.

ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

 

Sathish Kumar:

This website uses cookies.