இவரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், இந்தியாவின் நம்பர்-4 இடத்துக்கு இவர்தான் மிகச் சிறந்த வீரர்! முகமது கைஃப் ஓபன் டாக்

இவரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், இந்தியாவின் நம்பர் 4 இடத்துக்கு இவர்தான் மிகச் சிறந்த தகுதியான வீரர்! முகமது கைஃப் ஓபன் டாக்!

இந்திய அணி எப்போதும் பேட்டிங் இருக்கு சொர்க்கபுரியாக இருந்திருக்கிறது. ஆனால், தற்போதெல்லாம் பந்துவீச்சாளர்கள் தான் போட்டியை வென்று கொடுக்கிறார்கள். டாப் ஆர்டர் மிக தெளிவாக அதிரடியாக ஆடி, ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவிற்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.

குறிப்பாக நான்காம் இடத்தில் வரும் பேட்ஸ்மேன் யார் என்று தற்போது வரை சரியான நிலவரம் இல்லை. உலக கோப்பை தொடரிலும் இந்தியாவின் தோல்விக்கு இது தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு, ஸ்ரேயஸ் ஐயர் என பல வீரர்களை சோதித்து பார்த்து விட்டார்கள்

உலக கோப்பை தொடருக்கு பின்னர்தான் இது குறித்து சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் விராட் கோலி. தற்போது முகமது கைப் ஒரு வீரர்ரைக் காட்டி இவர்தான் அந்த இடத்திற்கு சரியான வீரர் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில்..

நான் ஸ்ரேயஸ் ஐயரின் மிகப்பெரிய ரசிகன். உள்ளூர் போட்டிகளில் இருந்து அவரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல வருடங்களாக ஆடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிற்காக அவருக்கு பெரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் பல வருடங்கள் ஆடிவிட்டார். ஆயிரக்கணக்கான ரன்கள் குவித்து விட்டார் அவர் ஐபிஎல் இப்போதும் ஆடிக் கொண்டிருக்கிறார்.

உள்ளூர் போட்டிகளில் ஆடி அவருக்கு போரடித்துவிட்டது. மனரீதியாக அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அணியில் தனது இடம் என்ன எப்படி ஆட வேண்டும் என்று எப்போதும் சரியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கோபப்பட்டு எதையும் விட்டுக் கொடுத்து விடுவதில்லை. ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருக்கும் போது பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். தற்போது கேப்டனாகவும் மாறிவிட்டார். இதன் காரணமாக மிகவும் தேறிவிட்டார் இந்தியாவிற்கு இவரை விட்டால் நான்காம் இடத்திற்கு மிகப்பெரிய வீரர் கிடைக்க மாட்டார் அவரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.