11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தன. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி அரைஇறுதியுடன் துரத்தப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன் கிரீடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், 3 முறை சாம்பியனான இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது.
இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனையான ஷிகா பாண்டே ஈர்க்க கூடிய வகையில் செயல்பட்டார். லீக் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக முறையே 3, 2 விக்கெட்களை கைப்பற்றினார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலில், 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.சுமார் ஒரு மாதம் நடந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகளும், பதவி உயர்வும் வழங்கி கவுரவித்து வருகின்றன. அந்த வகையில் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஷிகா பாண்டேவுக்கு இந்திய விமானப்படை, பதக்கமும், பரிசும் வழங்கி கௌரவித்துள்ளது. 28 வயதான அவர் மாநிலம் கோவாவை சேர்ந்த வீராங்கணை ஆவார் ஷிகா சுபாஸ் பாண்டே.
இதற்காக இந்திய விமானப்படை சார்பில், அவருக்கு புது டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு காசோலை மற்றும் பதக்கங்களை, ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோ வழங்கினார். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, இந்திய விமானப்படையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலராக ஷிகா பாண்டே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விமானப்படையில் பணிபுரிந்துகொண்டு, இந்திய அணியில் இடம் பிடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஷிகா பாண்டே பெற்றார்.
இதுவரை இந்தியாவிற்க்காக 2 டெஸ்ட், 32 ஒரு நாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆல் ரரவுண்டர் ஷிகா பாண்டே ஒரு நாள் போட்டிகளில் 2 அரை சதம் அடித்துள்ளதுடன் 45 விக்கெரட்டுகளையும் சாத்துள்ளார் . அவரது ஒரு நாள் போட்டியின் சராசரி 19.46 ஆகும். எக்கனமிக்கலாக பந்து வீசக்கூடியர அவர்.
இந்திய கேப்டன் மிதாலிராஜ் 2005-ம் ஆண்டு இந்திய அணியை இறுதி ஆட்டத்திற்கு அழைத்து சென்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2-வது முறையாக இப்போதும் அவரது தலைமையில் இந்திய படை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. வெற்றியின் விளிம்புக்கு வந்தும் இறுதியில் கோப்பையை கோட்டை விட்டது. 34 வயதான மிதாலி ராஜுக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும். அதனால் அவரது உலக கோப்பை ஆசை, கடைசி வரை கனவாகவே போய் விட்டது. இந்தியா மட்டுமல்ல, இதுவரை எந்த ஆசிய அணியும் பெண்கள் உலக கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பைனலில் தோற்று இரண்டாம் இடம் பிடித்து இருந்தாலும் புதிய அதயாயத்தை இந்திய வீராங்கனைகள் துவக்கியுள்ளனர்.கேப்டன் மிதாலி ராஜ் ,ஜுலன் கோஸ்வாமி போன்ற அனுபவம் வாய்ந்த வீர்ங்கனைகளுக்கு இதுவே கடைசி உலககோப்பை ஆகும். இருப்பினும் பூனம் ராவுத்,ஹர்மன்பிரீட் கவுர் போன்ற இளம் வீராங்கனைகள் அணிக்கு வலு சேர்ப்ப்பார்கள். பெண்கள் கிரிக்கெட்டிற்க்கு கிடைத்த இந்த வறவேற்ப்பின் மூலம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டிற்க்கு புதிய புரட்சி ஏற்ப்பட்டாற் போல் உள்ளது.
எவ்வாராயினும் பெண்கள் அணிக்கு தற்போது நல்ல வாய்ப்புகளும் , உற்ச்சாகமும் கொடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது.