ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கிய முகமது சமி, சிராஜ், நவதீப் சைனி !!
ஆஸ்திரேலியா ஏ அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. சிட்னி மைதானத்தில் மூன்று நாள் பயிற்சி போட்டியாக இது திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் பிம்பங்களை வைத்து பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இது ஒரு சில சர்ச்சைகளை தற்போது கிளப்பியிருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த முதல் பயிற்சி போட்டியில் டெஸ்ட் போட்டிபோல அல்லாமல் அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் ஐசிசி விதிகளின்படி ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன்னர் ஒரு பகலிரவு மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். இதற்காக இந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி சிட்னி மைதானத்தில் விளையாடி வருகிறது. இதனையடுத்து வந்த இந்திய அணியின் கேப்டன் ரகானே 4 ரன்களிலும் ஹனுமா விஹாரி 15 ரன்களிலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 5 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
மேலும் முகமது சமி, சாகா ஆகியோர் முட்டை ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனை அடுத்து வந்த இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா அடித்து ஆடினார். பும்ரா 57 பந்துகளில் 55 ரன்கள் அடிக்க முகமது சிராஜ் 34 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 194 ரன்கள் எடுத்தது ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்படி இந்திய அணியை 200 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஏ அணி கட்டுப்படுத்தி விட்டது என்பதை அறிந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய ஏ அணி என்று கூட பாராமல் ஆக்ரோஷமாக பந்து வீசினார்.
முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் ,நவதீப் சைனி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் தலையிலேயே பந்துவீசினார். பேட்ஸ்மேன்களுக்கு அப்படி வீசினால் கூட பரவாயில்லை கடைசி கட்ட வீரருக்கும் கூட பவுன்சர் வீசி ஆக்ரோசமாக அடித்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் இதனை பார்த்த அந்த போட்டியின் வர்ணனையாளர்கள் கடைநிலை வீரர்களுக்கு இதுபோன்ற பந்துகள் தேவையா ? இந்திய பந்துவீச்சாளர்கள் இரக்கமில்லாமல் பந்து வீசுகின்றனர் கடைசிகட்ட வீரர் தனது விக்கெட்டை எப்படியாவது இறந்துவிட வேண்டும் என்று வேண்டுமென்றே வெளியேறி விட்டார். அந்த அளவிற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆக்ரோசமாக வீசுகின்றனர். இது நல்லதல்ல என்று கமென்ட் செய்தனர்.