ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் !!

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு சச்சின், டிராவிட், சேவாக், அஸ்வின், கைஃப் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் இருந்து மற்ற நடிகைகளுக்கு ரோல் மாடலாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தன்னுடைய குடும்ப உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். ஆனால், சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு திடீரென மரணமடைந்தார்.

இவரின் மரணத்தை தொடர்ந்து ஓட்டுமொத்த திரையுலகமும் ஸ்ரீதேவிக்கு தனது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், சச்சின், டிராவிட், சேவாக், அஸ்வின், கைஃப் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்; 

ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சேவாக்;

ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கங்குலி; 

ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்வின்; 

ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா? அவரது இழப்பை ஏற்கமுடியவில்லை. இதுதான் வாழ்க்கை போல. அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த துக்கத்தை தாங்கி கொள்ள வேண்டும் என்று உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போல் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், வி.வி.எஸ் லக்‌ஷ்மன், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து, சாய்னா நெஹ்வால் போன்ற விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Mohamed:

This website uses cookies.