காயத்திலேயே காலியாக போகும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ! அடுத்த ஆறு மாத காலத்திற்கு கிரிக்கெட்டுக்கு குட்-பை !
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் புவனேஸ்வர் குமார். 2012 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமாகி தற்போது வரை 21 டெஸ்ட் போட்டியிலும் 114 ஒருநாள் போட்டிகளிலும் 43 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
என்ன தான் அதிகமாக போட்டிகளில் ஆடவில்லை என்றாலும் இவரது திறமை காரணமாக தொடர்ந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இவருக்கு தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகினார். இதனை தொடர்ந்து தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி எடுத்து வருகிறார் புவனேஸ்வர் குமார்.
இவருக்கு அடுத்த மாதம் பயிற்சி முடிந்து விடும், இருந்தாலும் தொடர்ந்து அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது 2021 ஆம் ஆண்டு மே மாதங்களில் நடக்கும் ஐபிஎல் தொடருக்கு தான் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்புவார் என்று செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து வந்துள்ள அதிகாரப்பூர்வ செய்தி ஒன்றில் அடுத்த ஆறு மாதங்களுக்கு புவனேஸ்வர் குமார் ஓய்வு எடுக்கவேண்டும் பந்துவீச்சு முறையை அவர் மாற்றப் போகிறார்.
இதன் காரணமாக அவரால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாது. வேகப்பந்து வீச்சு உடலை வருத்தி செய்யவேண்டிய ஒரு வேளை. இதன் காரணமாக முதுகு வலி, இடுப்பு வலி, பின் இடுப்பு வலி, தசைப்பிடிப்பு ஆகிய பிரச்சினைகள் அடிக்கடி வந்து விடும். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வப்போது தங்களது பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்வார்கள். இதைத்தான் தற்போது புவனேஸ்வர் குமார் செய்து வருகிறார் என்று அந்த அதிகாரபூர்வ செய்தியில் வந்திருக்கிறது.