வீடியோ: தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அப்படியே ஆடிக்காட்டிய சிறுமி… அசந்துபோன நெட்டிசன்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போலவே அச்சு அசலாக ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடிக்காட்டிய சிறுமியின் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதை கண்ட அவரது ரசிகர்கள் வாயடைத்துப்போயுள்ளனர்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. ராஞ்சி போன்ற சிறிய நகரில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு வந்து பல சாதனைகளை படைத்து இருக்கும்வரை இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்கள் போற்றி வருகின்றனர். இந்திய அணிக்காக ஐசிசி நடத்தும் அனைத்து வித கோப்பைகளையும் இவர் பெற்றுத் தந்திருக்கிறார்.
குறிப்பாக 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை பெற்றுத்தந்தது இன்றியமையாதது. 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியின் அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவர் மீண்டும் இந்திய அணிக்கு எப்போது வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தோனி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். அவரது வருகைக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். கிரிக்கெட் அரங்கில் தனக்கென டிரேட்மார்க் சாட்டை வைத்திருக்கிறார். அதற்கு ஹெலிகாப்டர் ஷாட் என்ற பெயரும் உண்டு.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டிர்க்கு பிரத்தியேக ரசிகர்களும் உண்டு. பல இளம் வயதினரை ஹெலிகாப்டர் ஷாட் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஹெலிகாப்டர் சாட்டை அச்சு அசலாக அப்படியே ஒரு சிறுமி ஒருவர் ஆடிக் காட்டியிருக்கிறார்.
இந்த சிறுமியின் வீடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.