முன்னாள் ரஞ்சி கிரிக்கெட்டர் மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜெயந்த் யாதவின் தந்தையான ஜெய் சிங் மரணம் அடைந்தார். ஜெய் சிங்கின் உறவினர் யோகேந்திர யாதவால் இந்த செய்தி வெளியே வந்தது.
ஜெயந்த் யாதவ் மற்றும் அவரின் குடும்பம் (தாய் மற்றும் இரண்டு சகோதரிகள்) ஆகியோர் லோடி தெருவில் இறுதி சடங்கு செய்யவுள்ளனர்.
“எனது உறவினர் மற்றும் ஜெயந்த் யாதவின் தந்தை ஜெய் சிங் மரணம் அடைந்ததை கூறுவதற்கு வருத்தம் அளிக்கிறது,” என யோகேந்திர யாதவ் ட்வீட் செய்தார்.
சிறப்பாக விளையாடிய ஜெய் சிங், ஜெயந்த் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சிறப்பாக உதவி செய்தார். கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் என் தந்தை தான் காரணம் என ஜெயந்த் யாதவ் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் என்னை என் தந்தை சேர்க்கவில்லை என்றால், நான் ஒரு கிரிக்கெட்டராய் வந்திருக்க முடியாது எனவும் கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜெயந்த் யாதவ், சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியின் தேர்வாளர் கண்ணனுக்கு தென்பட்டார். இது மட்டும் இல்லாமல், 2016 ரஞ்சி கோப்பை சீசனில் 33 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதனால், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து நவம்பர் 17, 2016 அன்று இந்திய அணிக்கு விளையாடினார் ஜெயந்த் யாதவ். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயந்த் யாதவ், 11 விக்கெட்டுகளை எடுத்து, 1 சதம், 1 அரைசதம் என 228 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த திறமையான ஆட்டத்தால் இவரை சிறந்த வீரராக கருதுகின்றனர்.