நியுஸிலாந்தில் கிரிக்கெட் வீரர் மரணம்: ஆழந்த இரங்கல்!

எதிர்பாராத விதமாக இந்தியாவில் பிறந்த ஒரு கிரிக்கெட் வீரர் ஹரிஷ் கங்காதரன் நியூசிலாந்தில் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து தனது உயிரை இழந்துள்ளார். 33 வயதான அவர் உடல்நலம் இல்லாமல் அந்த கிரிக்கெட் அணிக்காக ஆடி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஹரிஷ் அந்த போட்டியில் ஏற்கனவே ஆடும்போது 2 ஓவர்கள் வீசியுள்ளார். அந்த ஓவர்கள் வீசும் போது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பின்னர் கடைசியில் திடீரென அந்த கிரிக்கெட் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பின்னர் சக கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு முதலுதவி கொடுத்தும் அவரால் மீண்டு வர முடியவில்லை,

பின்னர் எமர்ஜென்சி வாகனம் அழைக்கப்பட்டு அனைவரும் அவருக்கு உதவி செய்தனர். இருந்தும் எந்த சிகிச்சையும் அவருக்கு பலனளிக்கவில்லை. ஹரிஷ் கங்காதரனுக்கு நிஷா என்ற மனைவியும் கௌரி என்ற மூன்று வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த கிரிக்கெட் கிளப்பின் முதல்வர் மனமுருக மன்னிப்பு கோரியும் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

எனது மனம் உடைந்து விட்டது. அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் அறிவிக்க முடியவில்லை. திடீரென இறந்தது எங்களுக்கு பேரிழப்பை கொடுத்துள்ளது. எங்களது கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் இருந்து விட்டார் என்பது எங்களுக்கு நல்ல செய்தி அல்ல. ஹரிஷ் கங்காதரனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனடியாக செய்தோம். சக வீரர்களும் அவருக்கான உதவிகளை நன்றாக செய்தார்கள். மேலும் எமர்ஜென்சி வாகனம் அழைக்கப்பட்டு அவருக்கு உதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவரால் மீண்டு வர முடியவில்லை என்று கூறினார் அவர்.

ஹரிஷ் கங்காதரன் ஒரு ஆரோக்கியமான மனிதர் அவர் திடீரென இறந்ததை அவரது அணியின் சக வீரர்களாள் இப்போதுவரை நம்பமுடியவில்லை. இந்தியாவில் பிறந்த அவர் அங்கு உள்ள ஒரு கிளப் அணிக்காக ஓபனிங் ஆடியும் சுழற்பந்து வீசியும் வந்துள்ளார். க்ரீன் ஐலேன்ட் அணிக்காக ஆடி வந்த அவர் கடந்த ஆறு வருடங்களாக அந்த அணியின் துவக்க வீரராக விளங்கியுள்ளார். இந்த கிரிக்கெட் அணி 1930இல் ஆரம்பிக்கப்பட்டதாகும். கங்காதரன் கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்திற்கு வந்து தனது மனைவியை திருமணம் செய்து கொண்டார்.

Sathish Kumar:

This website uses cookies.