ஐயர்லாந்து அணியில் இந்திய வீரர்!!

ஐயர்லாந்து அணியில் இந்திய வீரர்!!

இந்திய வம்சாவளி வீரர்கள் வெளிநாட்டிற்காக கிரிக்கெட் ஆடுவது புதிதல்ல. ஜீட்டன் படேல், குரிந்தர் சந்து, இஷ் சோதி என பலர் வெளிநாட்டு அணிகளுக்காக ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அந்த பட்டியளில் பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் சிம்ரன்ஜீத் சிங் சேர்ந்துள்ளார். ஐயர்லாந்தின் ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிம்ரன்ஜீத் சிங்.

தற்போது அவருக்கு 30 வயதாகிறது. அவர் பஞ்சாப் அணிக்காக பல்வேறு தொடர்கஈல்ல் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய குடும்பம் பஞ்சாபில் தான் வசித்து வருகிறது.

இந்த வருட மே மாதத்திலேயே ஐயர்லாந்து அணிக்காக தந்து அறிமுகப் போட்டியில் ஆடிவிட்டர் சிம்ரன்.

அவரது அணி சகாக்களால், சிமி எனப் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனா ஒரே ஒரு நாள் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டள்ளார்.

வரும் 13 ஆம் தேதி ஒருநாள் போட்டியில் ஆடுவார் சிமி.

கிட்டதட்ட 7 வருடங்கள் பஞ்சாப் ஜூனியர் அணிக்காக ஆடியுள்ளார் சிமி. அண்டர் 14, அண்டர் 17 என அனைத்து நிலைகளிலும் பஞ்சாப் அணிக்காக ஆடியுள்ளார்.

அண்டர் 17 மாநில சாம்பியன்சிப்பில் 725 ரன் குவித்துள்ளார் பஞ்சாப் அணிக்காக.

2001ல் நடந்த தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடயேயான கிரிக்கெட் தொடரில் சிறந்த வீரரக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்ரன்ஜீத் சிங்.

நன்றாக விளையாடியும், அண்டர் 19 அணியில் இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்தார் சிம்ரன்.

ஐயர்லாந்து அணிக்கு சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிகளுக்கான கௌரவம் அளிக்கப்பட்டது.

இதன்படி பார்த்தால் , தனது ஆசையான டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது நிறைவேறிவிடும் சிம்ரனுக்கு.

நான் இந்தியாவிற்க்காக ஆடாவிட்டாலும் , எனது முதல் டெஸ்ட் போட்டியை ஐயர்லாந்து அணிக்காக ஆடப்போவதில் மகிழ்ச்சி தான்.

தொடர்ந்து ஒதுக்கப்பட்டதால் ஐயர்லாந்திற்க்கு ஹோட்டல் மேனஜ்மேன்ட் படிப்பதற்க்காக சென்ரார் சிம்ரன்ஜீத் சிங். பின்னர் அங்கு அவருடைய நண்பர் அவரை கிரிக்கெடில் தொடர வற்புருத்தியதன் காரணமாக மீண்டும் கிரிக்கெட் ஆட தொடர்ந்துள்லார் சிமி.

உடனடியாக அதற்க்கு பலன் கிட்டியது, ஐயர்லாந்தின் மலஹைட் கிரிக்கெட் க்ளப் அணிக்காக ஆட தேர்வானார்.

அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் ஆசையில், இந்தியா வந்து 2008ல் பஞ்சாப் அணியின் ஐ.பி.எல் தேர்வில் ஆடியுள்ள்ளார்.

ஆனால், பஞ்சாப் ஐ.பி.எல் அணி அவரை தேர்வு செய்யவில்லை. பின்னர் 2009ல் ஐயர்லாந்தின் பேல்வெர்டேல் கிரிக்கெட் க்ளபிற்க்காக தேர்வு விச பெற்று அங்கு சென்று தொடர்ந்து ஆடியுள்ளார்.

ஆல் ரவுண்டரான அவர், 2013ல் ஐயர்லாந்தின்  லெயின்ஸ்டர் சீனியர் கோப்பையில் 56 விகெட்டுகளை வீழ்த்தியது மட்டுமில்லாமல் 786 ரன்களையும் குவித்துள்ளார்.

2015ல் லென்ஸ்டர் லைட்டிங் அணிக்காக ஆட மாறினேன். அங்கு கெவின் ஒ ப்ரேய்ன் போன்ற வீரர்களினால் எனது ஆட்டத் திறமை மேம்பட்டது.

Editor:

This website uses cookies.