பஞ்சாப் கிரிக்கெட் வரியத்திற்க்காக ஆடி வரும் அபிஷேக் குப்தா, தடைசெய்யப்பட்ட மருந்தை உபயோகித்த காரணத்திற்காக பிசிசிஐ நிர்வாகத்தினால் 8 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளுர் போட்டியில் போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகத்தில் சிறுநீரக மாதிரியை ஆய்வுக்காக டெல்லி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் உட்கொண்ட மருந்தில் டெர்புடலின் எனும் தடைசெய்யப்பட்ட பொருள் உள்ளதாக தெரியவந்து. இதுகுறித்து விளக்கமளிக்க, அபிஷேக் குப்தாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.
பிசிசிஐ நடவடிக்கை
ஏப்ரல் மாதம் ஆய்வு முடிவில் அபிஷேக் போதை மருந்து அருந்தியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பிசிசிஐ யின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பகுதி 2.1 ன் கீழ் விசாரிக்கவும் நிரூபிக்கவும் வாய்ப்பளித்தது. இதில், நேரடியாக உட்கொண்டாரா? இல்லை உடல்நிலை காரணமாக எடுத்துக்கொண்ட மருந்தில் தவறுதலாக இருந்ததா? என பரிசோதிக்கப்பட்டார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு
அபிஷேக்கின் சுவாசம் மற்றும் செரிமான குழையை பரிசோதித்து பார்த்ததில், அவர் உடல்நிலைக்கு ஏடுத்துக் கொண்ட மருந்தில் தவறுதலாக இருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மருந்து கொடுத்த மருத்துவரிடமும் விசாரணை நடந்தது. இவற்றின் அடிப்படையில், விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், பிசிசிஐ விதியின் பகுதி 10.10.2, பகுதி 10.10.3 இரண்டும் அடிப்படையில் முழு விலக்கு அளிக்க முடியாது எனவும், ஏதேனும் ஒட்டு வகையில் போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாக குறைந்தபட்சம் 8 மாதம் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த தடைகாலம் ஆட்டம் நடந்த நாளான ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கும் என தெரிவித்தது. தடைக்காலம் செப்டம்பர் மாதம் வரை என கூறியது.
ஏனெனில், வீரர்கள் உட்கொள்ளும் பொருளுக்கு அவர் அவரே பொறுப்பு. முழு கவனத்துடன் இருப்பது அவர்கள் கையில் தான் உள்ளது. வீரர்கள் 24 மணி நேரமும் கவனிக்கப்படுவர் என தெரிவித்தது போதைப் பொருள் தடுப்பு பிரிவு.