இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அணி திரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
உலகச் சாம்பியன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்து அணியை எந்த ஒரு தொடரையும் ஜெயிக்க விடாமல் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போன்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முன்னதாக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் டி.20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றியிருந்த இந்திய அணி, நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றி, இங்கிலாந்து அணியை வெறும் கையுடன் நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிலையில் உலகின் தலை சிறந்த வீரர்களான இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகின்றனர் என்று கிரிக்கெட் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக விராட் கோலி சில மாதங்களாக சதம் அடிக்காமல் அனைவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்பின்னர் களுக்கு எதிராக சரியாக விளையாடாமல் தனது விக்கெட்களை கொடுத்தனர். துவக்க வீரரான ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்த நிலையில் அதில் ரஷீத் வீசிய பந்தை கணிக்கத் தவறி தனது விக்கெட்டை இழந்தார், அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மொயின் அலியிடம் சிக்கி தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். சமீப காலமாகவே இந்திய அணி வீரர்கள் ஸ்பின்னர் களுக்கு எதிராக விளையாடுவதில் சற்று கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்ததாவது, இந்திய அணி துவக்க வீரர் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷீத் இடம் தனது விக்கெட்டை இழந்தார் அதேபோன்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலியிடம் தனது விக்கெட்டை இழந்தார்.நிச்சயமாக இந்திய அணி வீரர்கள் இதில் கவனம் கொள்ள வேண்டும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் இன்னும் திறமையாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.