இந்த தொடரில் சஞ்சு சாம்சன் சுயநலமற்ற வீரர் என்பதை நிரூபித்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
அணியும் புதிது கேப்டனும் புதிது என்றாலும் கிரிக்கெட்டில் திறமைக்கு தான் பரிசு என்பதை உறுதி செய்யும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது ரசிகர்கள் உட்பட பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெற்றிபெற்ற குஜராத் அணியையும் அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களையும் மேலும் அந்த அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதே போன்று இறுதிப்போட்டிக்கு வரை முன்னேறி, சரியாக செயல்படாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்த தவறை சுட்டிக்காட்டியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்ற அணி வீரர்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கிரிக்கெட் ஆலோசகருமான சபா கரீம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் குறித்தும் அணியில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
அதில்,“இந்த தொடர் மூலம் சஞ்சு சாம்சன் தன்னை சுயநலமற்ற வீரர் என்பதை தெரியப்படுத்தியுள்ளார். இந்த தொடரில், எளிதாகவும் நல்ல ஸ்ட்ரைக் ரேட் மெயின்டெய்ன் பண்ணுவதிலும்,ரன்களை குவிப்பதிலும்,நல்ல பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டதிலும் சாம்சன் சிறப்பாக செயல்பட்டார்.சில போட்டிகளில் கூடுதல் சிறப்பாகவே செயல்பட்டார்.ஆனால் முக்கியமான சில போட்டிகளில் இவர் எதிர் பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இவருடைய பேட்டிங் முன்பை விட தற்பொழுது மெருகேறி உள்ளது, இதற்கு முக்கிய காரணம் கேப்டன்ஷிப் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், இவர் இன்னும் நிலையான ஒரு வீரராக உருவாக வேண்டும் என்றும் சபா கரிம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு குறித்து பேசுகையில்,“இந்த தொடரில் அவர் 1அல்லது2 போட்டிகளில் தேவையில்லாமல் பேட்டிங் ஆர்டரில் அஸ்வினை மேல விளையாட வைத்து இவர் கீழே விளையாடியுள்ளார் இது தேவையில்லாத தவறாகும், என்னுடைய பார்வையில் ஜாஸ் பட்லருக்கு பிறகு சஞ்சு சாம்சன் 3வது பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சபா கரிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.