மீண்டும் தேர்வு குழு தலைவர் மாற்றம் ! சௌரவ் கங்குலி அதிரடி !

மீண்டும் தேர்வு குழு தலைவர் மாற்றம் ! சௌரவ் கங்குலி அதிரடி !

சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக தேர்வுக்குழுவில் பல்வேறு விதிகளை புதிதாக புகுத்தி அதற்கேற்ப தேர்வு குழு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். நீதிபதி லோதா கமிட்டியின் அடிப்படையின் படி அமைக்கப்பட்ட விதிகளை வைத்து, இந்தத் தேர்வுக் குழுவை பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் 2014 ஆம் ஆண்டு முதல் செய்யவில்லை.

கங்குலி வந்ததிலிருந்து அந்த கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்று அப்படியே செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் பிசிசிஐ விதிகளின்படி டெஸ்ட் ஆட்டங்களில் அதிக எண்ணிக்கையில் விளையாடியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஒருவர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுவார்.

இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் சேத்தன் சர்மா, அஜித் அகர்கர்,  சுனில் ஜோஷி போன்ற பல முன்னாள் வீரர்கள் இதற்கு தங்களது பெயரை பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் அதிகமாக விளையாடியிருக்கும் சேத்தன் சர்மா தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் மொத்தம் 23 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

16 வயதில் அரியானா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடத் தொடங்கி சேத்தன் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில், 19 வயதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தோ்வாளா்கள் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த சா்மா, தாம் தற்போது எதையும் பேசுவதை விட செயலில் அதிகம் செய்து காட்ட விரும்புவதாகக் கூறியுள்ளாா்.

Prabhu Soundar:

This website uses cookies.