பச்சை புல்தரை ஆடுகள் என்னை உந்தி ஆட வைக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம். உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
2008-ம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோரது பேட்டிங்கும், ஆர்.பி.சிங், இர்பான்பதான், கும்ப்ளே ஆகியோரது பந்து வீச்சும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
இந்திய அணி பெர்த் மைதானத்தில் 3 டெஸ்டில் தோற்றுள்ளது. 1977-ம் ஆண்டு பிஷன்சிங்பெடி தலைமையிலான அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும், 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான அணி 300 ரன் வித்தியாசத்திலும், 2012-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இன்னிங்சில் மற்றும் 37 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.
ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் 44 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றி பெற்றது. 11 டெஸ்டில் தோற்றது, 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 735 ரன் குவித்ததே (2003) இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 400 ரன் குவித்ததே அதிக பட்சமாகும். பாகிஸ்தான் 62 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். ஆஸ்திரேலிய அணி 76 ரன்னும், இந்தியா 141 ரன்னும் குறைந்தபட்சமாக எடுத்தன
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது.
ச்சும், சுழற்பந்துவீச்சும் அமைந்துள்ளது. ஆனால், அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, சுழற்பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனால், கடந்த இரு நாட்களாக இருவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ரோஹித் சர்மாவுக்கு இடுப்புப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் பிடிப்பு ஏற்பட்டதால், அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். அஸ்வினுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டதால் அவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே பிரித்வி ஷா கணுக்கால் காயத்தில் இருந்து மீளாத நிலையில், இரு முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதனால், பெர்த் டெஸ்ட் போட்டிக்கு அஸ்வின், ரோஹித் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர் நீக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.இதற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்
இதற்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்கள். பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த பிருத்வி ஷா இன்னும் குணமாகாததால் 2-வது டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 13 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜடேஜா.