இந்திய சுழற்ப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசினர்: கேன் வில்லியம்சன்!!

நேப்பியர் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் மீதான எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக நல்ல பவுலிங், மோசமான ஷாட் தேர்வு, உத்தி ஆகியவற்றின் கலப்பில் நியூஸிலாந்து 157 ரன்களுக்கு மடிந்து 8 விக்கெட்டுகளில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

சமீபமாக 300 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் செய்து பழக்கப்பட்டதால் அந்த அணி இறங்கும்போதே 350 என்று நினைத்து விடுவதாக கேப்டன் கேன் வில்லியம்சன் தன் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

“இது எங்களது நல்ல ஆட்டம் அல்ல. நாங்கள் இந்திய அணி நன்றாக ஆடும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் மிக நன்றாக ஆடிவிட்டனர். இங்கு மரபான பிட்ச் அல்ல இது.  இது ஹார்டான பிட்ச் அல்ல. வேகம் குறைந்த பந்துகளை பார்த்து ஆடியிருக்க வேண்டும். ஆனாலும் இந்திய பவுலர்களின் லெந்த் அபாரமானது.

250 ரன்கள் எடுத்திருந்தால் சவாலாக இருக்கும் பிட்சில் 150+ எப்படி போதும்? பிட்சுக்குத் தகுந்தவாறு அட்ஜஸ்ட் செய்யவில்லை.  சிலவேளைகளில் இங்கு வரும்போது ‘ஆம் இது 350+ பிட்ச்’ என்று நினைக்கிறோம் இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

இந்தப் பிட்சில் கொஞ்சம் சாதுரியம் தேவை.  அனைத்து இந்திய பவுலர்களும் பங்களிப்பு செய்தனர், ஆனால் இன்னும் கொஞ்சம் சிந்தித்து நாங்கள் ஆடியிருக்க வேண்டும்.  இந்தத் தோல்வியிலிருந்து விரைவில் நகர்ந்து செல்லுதல் நலம்” இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்.

கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

குல்தீப் யாதவ் பின்வரிசையைக் காலி செய்தார்.  ஒருவிதத்தில் பார்த்தால் ஆஸ்திரேலியாவாகட்டும், நியூஸிலாந்தாகட்டும் (இந்தப் போட்டி வரை) வங்கதேச அணி தங்கள் சொந்த நாட்டில் கொடுக்கும் சவால்களைக் கூட கொடுக்க முடியாமல் ஆடுகின்றனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி கூறியதாவது:

கடந்த சில ஆட்டங்களில் எங்களது சமச்சீரான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தினோம், டாஸை இழந்தவிடன் இது 300 ரன் போட்டி என்றே நினைத்தேன். இந்தப் பிட்சில் 150+க்கு அவர்களைச் சுருட்டியது கிரேட்.

வேகப்பந்து வரிசை எந்த ஒரு அணியையும் காலி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் திகழ்கின்றனர். ஷமியின் தன்னம்பிக்கை, அவரது பிட்னெஸ் அபாரம், நல்ல உடற்தகுதியுடன் அவர் இருப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். அவர் தன் டெஸ்ட் ஃபார்மை ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் மாற்றிவிட்டார்.

2வது பாதியில் பிட்ச் கொஞ்சம்  மந்தமடைந்தது, முதல் பாதியில் ஸ்பின்னர்கள் அபாரமாக வீசினர். பேட்ஸ்மென்களுக்கு ரூம் கொடுக்காமல் கிடுக்கிப் பிடி போட்டனர்.  களத்தில் பலதரப்பட்ட பரிமாணங்கல் இருந்த போதும் அவர்களுக்கு கடினமாக்கினர்.

தவணுக்கு மிக முக்கியமான இன்னிங்ஸ், அவர் இந்தியாவுக்காக போட்டிகளை பினிஷ் செய்து கொடுக்க வேண்டியது பற்றி பேசினோம், அவர் இத்தகைய மனநிலையில் ஆடினால் மிகப்பெரிய சொத்துதான். 2014ல் ஒருமுறை சூரியன் எனக்கு நேராக வந்து கண்பார்வையை மறைத்து ஆட்டமிழந்தேன், ஆனால் அப்போது இந்த விதிமுறை இல்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Sathish Kumar:

This website uses cookies.