வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்துக் கொண்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வுக் குழுவை சந்தித்து அதற்கு விளக்கம் கொடுத்து பின்னர் இந்த அணி தேர்வில் கலந்து கொண்டார். மும்பையில் இன்று காலை 11 மணிக்கு இந்த தேர்வு நடைபெற்றது 130 வரை நடைபெற்ற தேர்வில் விராட் கோலி மற்றும் தேர்வுக் குழுவினர் கலந்து கொண்டு இந்த அணிகளை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த அணியில் 15 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு வழக்கம்போல் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக வெளியே இருந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.
கேஎல் ராகுல் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே தங்களது இடத்தை மீண்டும் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார் .
ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா அணிக்குள் வந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக மீண்டும் அணிக்குள் வந்து சேர்ந்துள்ளார்.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளரரான காலீல் அகமதுவும் அடக்கம். மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சாகர் இடம் பெற்றுள்ளார். இவர் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்
- விராட் கோலி (கேப்டன்)
- ரோகித் சர்மா (துணை கேப்டன்)
- ஷிகர் தவான்
- கேஎல் ராகுல்
- ஸ்ரேயாஸ் ஐயர்
- மணிஷ் பாண்டே
- ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
- க்ருனால் பாண்டியா
- ரவீந்திர ஜடேஜா
- வாஷிங்டன் சுந்தர்
- புவனேஸ்வர் குமார்
- ராகுல் சாஹர்
- கலீல் அஹமது
- தீபக் சாகர்
- நவ்தீப் சைனி