இந்திய அணிக்கு இந்த ஒரு விசயம் தான் பிரச்சனை…இத மட்டும் சமாளிச்சிட்டா நியூசிலாந்த அடிக்கிறது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல; மைக் ஹசி சொல்கிறார் !!

இந்திய அணிக்கு இந்த ஒரு விசயம் தான் பிரச்சனை…இத மட்டும் சமாளிச்சிட்டா நியூசிலாந்த அடிக்கிறது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல; மைக் ஹசி சொல்கிறார்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணிக்கு தேவையான தனது ஆலோசனையை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக் ஹசி வழங்கியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் நெதர்லாந்து அணி வரை அனைத்து அணியையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, முதல் அணியாக உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஒருநாள் போட்டிகளிலும், நாக் அவுட் சுற்றிலும் இந்திய அணி மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி இந்திய அணி சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக் ஹசி இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மைக் ஹசி பேசுகையில், “உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எதை பற்றியும் பெரிதாக கண்டு கொள்ளாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான பழைய வரலாறுகள் பற்றி கவலையே பட மாட்டார்கள் என்பதே எனது கருத்து. பழைய வரலாறுகளை கண்டு கொள்ளாமல் புதிய வரலாறு படைக்கவே இந்திய வீரர்கள் வெறித்தனமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் எதை பற்றியும் பயப்படவும் மாட்டார்கள். இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது.  இந்திய அணியை வீழ்த்துவது மிக கடினம் என்றாலும், உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதே இந்திய  அணி மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த அழுத்தத்தை  இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது மட்டுமே ஒரே பிரச்சனையாகும், கேள்வியாகவும் உள்ளது. சொந்த மண்ணில் தோல்வியடைந்து விட கூடாது என்ற அழுத்தம் மட்டும் இல்லாவிட்டால் இந்திய அணியை வீழ்த்தவே முடியாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.