இன்று இங்கிலாந்து செல்கிறது கோஹ்லி தலைமையிலான இந்திய படை !!

இன்று இங்கிலாந்து செல்கிறது கோஹ்லி தலைமையிலான இந்திய படை 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான தொடருக்காக கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுகிறது.

இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது.

For the first time after the last three tours (in 2007, 2011 and 2014), the Indian team will be playing white-ball cricket before the Test matches in England. But that is not the only first of that sequence. There is another first too, and a serious one.

இந்தியாஇங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஜூலை 3-ந்தேதி நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1-ந்தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.

இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் மணிக்கு தொடங்குகிறது.

Indian cricket captain Virat Kohli, right and head coach Ravi Shastri address the media ahead of the team’s travel to England and Ireland in New Delhi, India, Friday, June 22, 2018. (Manish Swarup)

இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் போட்டி விவரம் வருமாறு:-

ஜூலை.3:- முதல் 20 ஓவர் போட்டி (மான்செஸ்டர்) இரவு 10.00 மணி.

ஜூலை.6:- இரண்டாவது 20 ஓவர் போட்டி (கார்டிப்)- இரவு 10.00 மணி.

ஜூலை.8:- மூன்றாவது 20 ஓவர் போட்டி (பிரிஸ்டல்) மாலை 6.30 மணி.

ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி (நாட்டிங்காம்) மாலை 5 மணி.

ஜூலை.14:- இரண்டாவது ஒருநாள் போட்டி (லண்டன்) மாலை 3.30.

ஜூலை.17:- கடைசி ஒருநாள் போட்டி (லீட்ஸ்) மாலை 5 மணி.

ஆகஸ்ட் 1-5: முதல் டெஸ்ட் (பர்மிங்காம்).

ஆகஸ்ட் 9-13: இரண்டாவது டெஸ்ட் (லார்ட்ஸ்).

ஆகஸ்ட் 18-22: மூன்றாவது டெஸ்ட் (நாட்டிங்காம்)

ஆகஸ்ட் 30-செப்.3: நான்காவது டெஸ்ட் (சவுத்தம்டன்)

செப் 7-11: கடைசி டெஸ்ட் (ஓவல்)

டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Mohamed:

This website uses cookies.