ஒரு வருடத்திற்கு இந்திய அணி ஆடப்போகும் தொடர்களின் முழு அட்டவணை வெளியீடு!!

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய அணி ஆடப்போகும் தொடர்களின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக, அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதனால் சிஓஏ குழு இந்திய அணி தலைமை அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் அணியின் நடு வரிசையில் பல மாற்றங்களை அடுத்தடுத்த தொடர்களில் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல் ரவி சாஸ்திரியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு மற்றும் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு இரண்டிற்கும் தற்போது கேள்வி எழும்பியுள்ளது. இந்நிலையில் வரும் தொடர்களில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்றும், டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்றும் தனித்தனியாக வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

அடுத்த ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்திய அணி ஆடவிருக்கும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆட இருக்கிறது. அதன் முழு விபரம் இதோ

இந்திய அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்

டி20 போட்டிகள்

  1. ஆகஸ்ட் 3 – முதல் டி20, ஃப்ளோரிடா
  2. ஆகஸ்ட் 4 – 2-வது டி20, ஃப்ளோரிடா
  3. ஆகஸ்ட் 6 – 3-வது டி20, கயானா

ஒருநாள் போட்டிகள்

  1. ஆகஸ்ட் 8 – முதல் ஒருநாள், கயானா
  2. ஆகஸ்ட் 11 – 2-வது ஒருநாள், டிரினிடாட்
  3. ஆகஸ்ட் 14 – 3-வது ஒருநாள், டிரினிடாட்

டெஸ்ட் போட்டிகள்

  1. ஆகஸ்ட் 22 – 26 – முதல் டெஸ்ட், ஆண்டிகுவா
  2. ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 3 – 2-வது டெஸ்ட், ஜமைக்கா

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

டி20 போட்டிகள்

  1. செப்டம்பர் 15 – முதல் டி20, தர்மசாலா
  2. செப்டம்பர் 18 – 2-வது டி20, மொஹலி
  3. செப்டம்பர் 22 – 3-வது டி20, பெங்களூர்

டெஸ்ட் போட்டிகள்

  1. அக்டோபர் 2-6 – முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்
  2. அக்டோபர் 10-14 – 2-வது டெஸ்ட், ராஞ்சி
  3. அக்டோபர் 19-23 – 3-வது டெஸ்ட், புனே

இந்தியா vs வங்கதேசம் தொடர்

டி20 போட்டிகள்

  1. நவம்பர் 3  – முதல் டி20, தில்லி
  2. நவம்பர் 7  – 2-வது டி20, ராஜ்கோட்
  3. நவம்பர் 10  – 3-வது டி20, நாகபுரி

டெஸ்ட் போட்டிகள்

  1. நவம்பர் 14-18 – முதல் டெஸ்ட், இந்தூர்
  2. நவம்பர் 22-26 – 2-வது டெஸ்ட், கொல்கத்தா

இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் தொடர்

டி20 போட்டிகள்

  1. டிசம்பர் 6 – முதல் டி20, மும்பை
  2. டிசம்பர் 8 – 2-வது டி20, திருவனந்தபுரம்
  3. டிசம்பர் 11 – 3-வது டி20, ஹைதராபாத்

ஒருநாள் போட்டிகள்

  1. டிசம்பர் 15 – முதல் ஒருநாள், சென்னை
  2. டிசம்பர் 18 – 2-வது ஒருநாள், விசாகப்பட்டிணம்
  3. டிசம்பர் 22 – 3-வது ஒருநாள், கட்டாக்

இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் – 2020

டி20 போட்டிகள்

  1. ஜனவரி 5 – முதல் டி20, குவாஹாட்டி
  2. ஜனவரி 7 – 2-வது டி20, இந்தூர்
  3. ஜனவரி 10 – 3-வது டி20, புனே

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

ஒருநாள் போட்டிகள்

  1. ஜனவரி 14 – முதல் ஒருநாள், மும்பை
  2. ஜனவரி 17 – 2-வது ஒருநாள், ராஜ்கோட்
  3. ஜனவரி 19 – 3-வது ஒருநாள், பெங்களூர்

இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 போட்டிகள்

  1. ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
  2. ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
  3. ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
  4. ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
  5. பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி

ஒருநாள் போட்டிகள்

  1. பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
  2. பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
  3. பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி

டெஸ்ட் போட்டிகள்

  1. பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
  2. பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

ஒருநாள் போட்டிகள்

  1. மார்ச் 12 – முதல் ஒருநாள், தர்மசாலா
  2. மார்ச் 15 – 2-வது ஒருநாள், லக்னோ
  3. மார்ச் 18 – 3-வது ஒருநாள், கொல்கத்தா

Prabhu Soundar:

This website uses cookies.