என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்; இந்திய வீரர் மீது புகார் !!

என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்; இந்திய வீரர் மீது புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான முனாப் பட்டேல் கொலை மிரட்டல் விடுப்பதாக வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல்.  இவர் இப்போது குஜராத் மாநிலம், வடோதரா கிரிக்கெட் சங்க ஆலோசகராக இருக்கிறார். இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர், தனக்கு முனாப் பட்டேல் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

சங்கத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு முனாப் படேல்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Munaf Patel retired from all forms of the game last year. He last played for India in a T20 international against England in Setpember, 2011 and was a part of the World Cup-winning side in 2011. Overall, he represented India in 13 Tests, 70 ODIs and 3 T20Is since making his debut at Mohali on March 9, 2006.

 

இந்தப் புகாரை மறுத்துள்ள முனாப் படேல், ’தேர்வு குழுவில் அவருக்குப் பிரச்னை இருக்கிறது. நான் அணியின் ஆலோசகர்தான். மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை. தேவையில்லாமல் என் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது. என் மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது’ என்று முனாப் படேல் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.