சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இந்த ஆண்டு(2017) இந்திய அணி 11 டெஸ்ட் (7 வெற்றி, ஒரு தோல்வி, 3 ‘டிரா’), 29 ஒருநாள் (21 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவு இல்லை), 13 சர்வதேச ‘டுவென்டி-20’ (9 வெற்றி, 4 தோல்வி) போட்டிகளில் விளையாடியது. இதில் முக்கியமான 17 சாதனைகள்.
இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 118 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன், லோகேஷ் ராகுல் 110 ரன்கள் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இடம்: புளோரிடா, 2016) எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
1.ரோகித்தின் 35 பந்து சதம்
இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 35 பந்தில் 100 ரன்களை எட்டினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ வரலாற்றில், அதிகவே சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லருடன் (35 பந்து, எதிர்: வங்கதேசம், 2017) பகிர்ந்து கொண்டார்.
2.ரோகித்தின் மூன்றாவது இரட்டை சதம்
மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா, 208 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், மூன்று முறை இரட்டை சதமடித்த (264, 209, 208) முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
3.குல்தீப் – ஹாட்ரிக்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல்கட்டாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியாவின் குல்தீப் யாதவ், ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன்மூலம் சேட்டன் சர்மா (1987, எதிர்: நியூசிலாந்து, இடம்: நாக்பூர்), கபில்தேவ் (1991, எதிர்: இலங்கை, இடம்: கோல்கட்டா) ஆகியோருக்கு பின், இம்மைல்கல்லை எட்டி இந்திய பவுலரானார்.
4.இந்தியாவின் 37 சர்வதேச போட்டிகளில் வெற்றி
இந்திய அணி, இந்த ஆண்டு மொத்தம் 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக சர்வதேச வெற்றிகளை பதிவு செய்த 2வது அணி என்ற பெருமை பெற்றது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (38 வெற்றி, 2003) உள்ளது
5.டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்
இந்திய அணி, இந்த ஆண்டு ஒருநாள் (392/4, எதிர்: இலங்கை, இடம்: மொகாலி, டிச. 13) மற்றும் சர்வதேச ‘டுவென்டி-20’ (260/5, எதிர்: இலங்கை, இடம்: இந்துார், டிச. 22) போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்தது.
6.விராட் கோலியின் சிறந்த சாதனைகள்
- இந்தியாவின் விராத் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் 6 முறை இரட்டை சதமடித்த முதல் கேப்டன் என்ற புதிய வரலாறு படைத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீசின் லாரா (5 இரட்டை சதம்) சாதனையை முறியடித்தார்.
- இந்த ஆண்டு டெஸ்ட் (1460 ரன், 26 டெஸ்ட்) மற்றும் ஒருநாள் (1059 ரன், 10 போட்டி) போட்டிகளில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி.
- ஒரு ஆண்டில், மூன்று டெஸ்ட் தொடர்களில் தலா 600 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரரானார் கோஹ்லி.
- ஒரே ஆண்டில் தொடர்ச்சியாக 3 இரட்டை சதமடித்த (204, எதிர்: வங்கதேசம் மற்றும் 213, 243, எதிர்: இலங்கை) முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி.
- இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் இந்தியாவின் கோஹ்லி 6 சதமடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (30 சதம்) முந்தி இரண்டாவது இடம் பிடித்தார் கோஹ்லி (32). முதலிடத்தில் சச்சின் (49) உள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்தியாவின் கோஹ்லி 243 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 235 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
7.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று முறை பங்கேற்ற முதல் இந்திய வீரரானார் யுவராஜ் சிங்.
8.ஹர்திக் பாண்ட்யா, அறிமுக டெஸ்டில் (எதிர்: இலங்கை, இடம்: காலே, 2017) 3 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
9.100 ஸ்டம்பிங் செய்த முதல் கீப்பர்
இந்தியாவின் தோனி, ஒருநாள் போட்டியில் 100 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். இவர், 312 போட்டியில் 105 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்துள்ளார்.
10. 100 முறை 300+
இந்திய அணி, 100 முறை, ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (96 முறை) உள்ளது.
11.அஸ்வினின் அதிவேக 300
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற சாதனை படைத்தார். இவர், 54 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, 56 டெஸ்டில் இச்சாதனை படைத்திருந்தார்.
12.லோகேஷ் ராகுல் – தொடர்ச்சியாக 7 அரைசதம்
இந்தியாவின் லோகேஷ் ராகுல், டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 7 அரைசதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர இச்சாதனை படைத்த 6வது சர்வதேச வீரரானார்.
13.புஜரா – ஒரே டெஸ்ட்டில் 5 நாள் பேட்டிங்
இந்தியாவின் புஜாரா, ஒரு டெஸ்டில் 5 நாட்களும் ‘பேட்டிங்’ செய்த 9வது வீரரானார். தவிர இந்த இலக்கை எட்டிய 3வது இந்தியரானார்.
14.லோகேஷ் ராகுல் – 1000 ரன்
டெஸ்ட் அரங்கில் 1000 ரன்களை பதிவு செய்த 19வது இந்திய துவக்க வீரர் என்ற பெருமை பெற்றார் லோகேஷ் ராகுல்.
15.சிகர் தவான் – இரன்டு முறை கோல்டன் பேட்
இந்தியாவின் ஷிகர் தவான், சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு முறை ‘கோல்டன் பேட்’ விருது வென்ற வீரர் என்ற பெருமை பெற்றார்.
16.பாண்டியா -அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்
இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, அறிமுக டெஸ்ட் போட்டியில் (எதிர்: இலங்கை, இடம்: காலே, 2017) 8வது இடத்தில் களமிறங்கி அரைசதமடித்த 5வது வீரரானார்
17. தோனி 300
300 அல்லது அதற்கு மேல் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 6வது இந்திய வீரரானார் தோனி (312). ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463), டிராவிட் (344), அசார் (334), கங்குலி (311), யுவராஜ் (304) இந்த இலக்கை எட்டினர்