முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு 4வது இடம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார். இன்னும் சிலரை நாம் முயற்சி செய்யலாம் எனவும் தெரிவித்தார். இதற்கிடையில், அம்பதி ராயுடு 2019 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவின் நான்காவது இடத்திற்க்கான தேடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராயுடு எதிர்பார்த்த அளவு ஜோபிக்கவில்லை. தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ராயுடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்கவில்லை.
பின்னர், மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் ராயுடுவை மாற்றினார். மறுபுறம், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ராயுடு 90 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் கிரிக்கெட் அணிக்கு அந்த இன்னிங்ஸ் முதுகெலும்பாக இருந்தது. 18 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்தார்.
“விருப்பங்கள் இன்னும் உள்ளன. என்ன நடக்குமென்று பார்ப்போம், ” என திங்கள்கிழமை ஈடன் கார்டனில் செய்தியாளர்களிடம் சவ்ரவ் கங்குலி தெரிவித்தார்.
மொஹாலியில் ஒருநாள் போட்டியில் இந்தியா 358 ரன்கள் எடுத்து தோற்றது. இருப்பினும், கங்கூலி அந்த அணிக்கு சாதகமாகவே பேசினார், ஏனெனில் பனி நிறைய இருந்தது ஸ்பின்னர்கள் பந்து பந்தை பிடிப்பதற்கு கடினமாக இருந்ததால் நினைத்ததை நடத்த முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர் டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து தனக்கு சாதகமாக்கிக்கொண்டார் என கூறினார்.
“பனி நிறைய இருந்தது. அது கடினமாக இருந்தது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு இதனால் ஏற்படாது” என கங்குலி கூறியுள்ளார்.
இந்தியா உலகக் கோப்பையின் பெரும்பாலான தளங்களில் ஆகியுள்ளது. இருப்பினும், அவர்களின் நடுப்பகுதியானது சற்று கேள்விக்குறியாக இருப்பது மற்ற அணிக்கு சாதகமாக அமையும் என்றார்.
ராயுடு 4வது இடத்திற்க்கான வாய்ப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, அவர் கடைசி 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 30.47 சராசரியாக 247 ரன்கள் அடித்தார். இதனால், ஹைதராபாத் பேட்ஸ்மேன் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணைவார்.