இந்திய அணியின் உலக கோப்பை தொடரில் அரைஇறுதி இருந்து ஷாக் ஆகி வெளியே வந்த பின்னர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பையில் உள்ள பிசிசிஐ கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கு இடையே மீட்டிங் நடைபெற்றது.
இந்த மீட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 15 பேர் கொண்ட டி20 அணியும், 15 பேர் கொண்ட ஒரு நாள் அணியும் அறிவிக்கப்பட்ட பின்னர் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரகானேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் போல இந்த அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடிய மாயாங் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் சுவர் சட்டேஸ்வர் புஜாரா, இளம் வீரர் கேஎல்.ராகுல் மற்றொரு இளம் வீரர் ஹனுமா விஹாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரில் தொடர்ந்து நன்றாக விளையாடி வரும் ரோஹித் சர்மாவிற்கு இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் விர்த்திமான் சகா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் ரவீந்திர, ஜடேஜா குல்தீப், யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- விராட் கோலி (கேப்டன்)
- அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்)
- மாயங்க் அகர்வால்
- கே.எல்.ராகுல்
- சி புஜாரா
- ஹனுமா விஹாரி
- ரோஹித் சர்மா
- ரிஷாப் பந்த் (வி.கீ)
- விருத்திமான் சஹா (வி.கீ)
- ஆர் அஸ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- குல்தீப் யாதவ்
- இஷாந்த் சர்மா
- முகமது ஷமி
- ஜஸ்பிரீத் பும்ரா
- உமேஷ் யாதவ்