உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வுக் குழுவை சந்தித்து அதற்கு விளக்கம் கொடுத்து பின்னர் இந்த அணி தேர்வில் கலந்து கொண்டார். மும்பையில் இன்று காலை 11 மணிக்கு இந்த தேர்வு நடைபெற்றது 1.30 வரை நடைபெற்ற தேர்வில் விராட் கோலி மற்றும் தேர்வுக் குழுவினர் கலந்து கொண்டு இந்த அணிகளை வெளியிட்டுள்ளனர்.
டோனி எப்போதும் ஓய்வு பெறுவார் என்ற பெரும் கேள்விகள் அனைத்தும் முடிவடைந்து, அவருக்கு இரண்டு மாதம் ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் அவர் தானாக ஓய்வு பெற்று ராணுவத்தில் பணிப்புரிய சென்றுள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில் பெரும் விவாதம் இருந்து வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் வெளிவந்ததால் கண்டிப்பாக விராட் கோலியிடம் இருந்து ஒரு கேப்டன் பதவியை எடுத்து அதை ரோஹித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று பல விவாதங்கள் நடைபெற்றது.
ஆனால் இதற்கெல்லாம் தேர்வுக்குழு செவிசாய்க்கவில்லை. மீண்டும் விராட் கோலியை கேப்டனாக இந்த அணிக்கு நியமித்துள்ளது. மேலும், விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு எடுப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் பொருள் கொள்ளாமல் விராட் கோலி நான் இந்த முழு தொடரையும் ஆடுவேன் என்று அறிவித்து தற்போது கேப்டனாக செயல்பட உள்ளார் .
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த அணியின் விராட் கோலி கேப்டனாகவும், ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக வெளியே சென்ற ஷிகர் தவான் அணிக்குள் நுழைந்துள்ளார்.
கேஎல் ராகுல் மீண்டும் தனது இடத்தை பிடித்துள்ளார். ஸ்ரேயஸ் அயர், மணிஷ் பாண்டே, கலீல் அஹமது மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இளம் வீரர்கள் விரைந்துள்ளனர்.
உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிய ரவிந்திர ஜடேஜா தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் மீண்டும் தங்களது இடத்திற்கு வந்து உள்ளனர். பும்ராவிற்கு அதற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முகமது சமி புவனேஸ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி
- விராட் கோலி (கேப்டன்)
- ரோகித் சர்மா (துணை கேப்டன்)
- ஷிகர் தவான்
- கேஎல் ராகுல்
- ஸ்ரேயாஸ் ஐயர்
- மணிஷ் பாண்டே
- ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
- கேதர் ஜாதவ்
- ரவீந்திர ஜடேஜா
- குல்தீப் யாதவ்
- புவனேஸ்வர் குமார்
- யுஜவேந்திர சாஹல்
- கலீல் அஹமது
- முகமது ஷமி
- நவ்தீப் சைனி