“டெத் ஓவரில் கெத்து காட்டும் வீரருக்கு வாய்ப்பு” முதல் டி20ல் ஆடும் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்தியாவின் உத்தேச அணி கணித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு நம்பிக்கையை வளர்க்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் முன்னோட்டமாக டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

தென்னபிரிக்காவுடன் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடத்தப்பட இருக்கிறது. இரு அணி வீரர்களும் இரு தினங்களுக்கு முன்பே இங்கு வந்துவிட்டனர்.  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணி இதுதான் என்று சில கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் கே எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி சூர்யாகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங் வரிசையில் இருக்கின்றனர்.

ஃபினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார். கடைசி நான்கு ஐந்து ஓவர்களில் இந்திய அணி ரன் குவிக்க திணறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா தொடரில் ஹர்திக் பாண்டியா ஓய்வில் சென்று விட்டார். ஆகையால் நிச்சயம் தினேஷ் கார்த்திக் கூடுதல் பொறுப்புடன் விளையாடுவார். அடுத்ததாக ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அக்சர் பட்டேல் இருக்கிறார். இப்போது தீபக் ஹூடா காயத்தினால் வெளியேற்றப்பட்டதால், தீபக் சகர் உள்ளே எடுத்து வரப்படலாம். இந்திய அணிக்கு கூடுதல் பேட்டிங் வாய்ப்பாக இருக்கும்.

சுழல் பந்துவீச்சில் சகல் இருக்கிறார். இவருக்கு ஆஸ்திரேலியா தொடர் எதிர்பார்த்த அளவிற்கும் அமையவில்லை. ஆகையால் தனது பழைய பார்மை இத்தொடரில் கொண்டு வருவதற்கு முழு முனைப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை துவக்க ஓவர்களில் பும்ரா மற்றும் தீபக் சகர் இருவரும் சிறப்பாக செயல்படுவர். அடுத்து டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த அர்ஷதீப் சிங் உள்ளே எடுத்து வரப்படலாம். அவருக்கு பக்கபலமாக அனுபவமிக்க பும்ரா அணியில் இருப்பார். ஆஸ்திரேலியா  தொடரில் இந்திய அணி டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து, செய்த தவறுகளில் இருந்து சரி செய்து கொள்ள இந்த முடிவை எடுக்கலாம்.

முதல் டி20 போட்டி: இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள்

ரோகித் சர்மா (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்ஸர் பட்டேல், சஹல் தீபக் சகர், பும்ரா, அர்ஷதீப் சிங்.

Mohamed:

This website uses cookies.