சற்று முன்: இளம் அதிரடி வீரர் காயம், தொடரில் இருந்து விலகல்: ரசிகர்கள் கவலை!

காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் இருந்து, தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா விலகியுள்ளார்.

மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு ஏ அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் 11 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

உலகக் கோப்பையில் விளையாடும் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக, ரிஷாப் பன்ட்டும் விஜய் சங்கர் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்குப் பதிலாக இந்திய ஏ அணியில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் அடைந்துள்ளதால் அவர் விலகியுள்ளார். அவருக்கு என்ன காயம் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, மகாராஷ்ட் ராவைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் சங்கருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக அன்மோல்ப்ரீத் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இளம் தொடக்க வீரரான பிரித்வி ஷா காயத்தால் விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  1. ஜூலை 11, மேற்கிந்திய தீவுகள் A vs இந்தியா A, 1 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் ஆன்டிகுவா, இரவு 7:00 மணி,
  2. ஜூலை 14, மேற்கிந்திய தீவுகள் A vs இந்தியா A, 2 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள்
    சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, இரவு 7:00 மணி
  3. ஜூலை 16, வெஸ்ட் இண்டீஸ் ஏ vs இந்தியா ஏ, 3 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
    இரவு 7:00 மணி
  4. ஜூலை 19, வெள்ளிமேற்கிந்திய தீவுகள் A vs இந்தியா A, 4 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள், கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம், கூலிட்ஜ், ஆன்டிகுவா, இரவு 7:00 மணி
  5. ஜூலை 21, சூரியன்மேற்கிந்திய தீவுகள் A vs இந்தியா A, 5 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள், கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம், கூலிட்ஜ், ஆன்டிகுவா
    இரவு 7:00 மணி

ஜூலை 24, புதன் – ஜூலை 27, சனிவெஸ்ட் இண்டீஸ் ஏ vs இந்தியா ஏ, 1 வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, இரவு 7:00 மணி

ஜூலை 31, புதன் – ஆகஸ்ட் 03, சனிமேற்கிந்திய தீவுகள் A vs இந்தியா A, 2 வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்
குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்
இரவு 7:00 மணி

ஆகஸ்ட் 06, செவ்வாய் – ஆகஸ்ட் 09, வெள்ளிவெஸ்ட் இண்டீஸ் ஏ vs இந்தியா ஏ, 3 வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட், பிரையன் லாரா ஸ்டேடியம், தரூபா, டிரினிடாட்
இரவு 7:00 மணி

Sathish Kumar:

This website uses cookies.