விண்டீஸ் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. விண்டீஸ் அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், வங்காளதேசம் அணிக்கெதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க உள்ளது.
இந்தநிலையில், இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 18 வீரர்கள் கொண்ட அணியில், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என ஆறு மிக முக்கிய வீரர்களின் பெயரே இடம்பெறவில்லை, பலர் காயத்தால் அவதிப்பட்டு வருவதன் காரணமாக முக்கிய வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, டேன் கிரிஸ்டியன், ஹசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், ஆண்ட்ரியூ டை, ஆடம் ஜாம்பா போன்ற பல சீனியர் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
அதே போல் ஜோஷ் பிலிப், ரிலே மெரிடித், வெஸ் ஆகர், ஜேசன் பெரேண்ட்ரஃப், மேத்யூ டை, ஆஷ்டோன் டர்னர் போன்ற வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2 ஆஷ்டேன் அகர், 3. வெஸ் அகர், 4 ஜேசன் பெரேன்டர்ஃப், 5. அலேக்ஸ் கேரி, 6. டேன் கிறிஸ்டியன், 7. ஜோஷ் ஹசில்வுட், 8. மொய்சஸ் ஹென்ரிக்ஸ், 9. மிட்செல் மார்ஷ், 10. ரிலே மெரிடித், 11. பென் மெக்டெர்மோட், 12. ஜோஷ் பிலிப், 13. மிட்செல் ஸ்டார்க், 14. மிட்செல் ஸ்வெப்சன், 15. ஆஷ்டோன் டர்னர், 16. அண்ட்ரூ டை, 17. மேத்யூ வடே, 18. ஆடம் ஜம்பா.