டெஸ்ட் போட்டி அணியிலேயே இருந்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி 14-ல் மெல்போர்னில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலை ஆஸ்திரேலியா தேர்வு செய்யாமல் அதிர்ச்சியளித்துள்ளது.
அதே போல் மேத்யூ வேடும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை, கேப்டன் ஸ்மித்தின் செல்ல நண்பர் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், டி20 அதிரடி வீரர் கிறிச் லின் ஒருநாள் தொடர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பாட் கமின்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணித்தேர்வுக்குழு தலைவர் டிரவர் ஹான்ஸ் கூறும்போது, “கிளென் மேக்ஸ்வெல் திறமை குறித்து யாருக்கும் சந்தேகம் எதுவும் இல்லை, ஆனால் அவர் சீராக ரன்களை எடுப்பதில்லை. இந்த வடிவத்தில் கடைசி 20 போட்டிகளில் மேக்ஸ்வெலின் சராசரி 22 மட்டுமே. கிறிஸ் லின் உள்நாட்டு கிரிக்கெட்டில் பிறருக்கு அச்சமூட்டும் ஒரு வீரராக திகழ்கிறார் அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்க முடியாது.
அதே போல் டிம் பெய்ன் தன்னைத்தானே தேர்வு செய்து கொண்ட வீரராகிறார், ஆஷஸ் தொடரில் பெய்ன் தன்னை நிரூபித்துள்ளார்” என்றார்.
ஆனால் தற்போது,
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து கிறிஸ் லைன் விலகியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து வருகிற 14-ந்தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கிறிஸ் லின் இடம் பிடித்திருந்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் மேக்ஸ்வெல்லை பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பிடித்தார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ் லின் பங்கேற்று விளையாடி வருகிறார். பிக் பாஷ் லீக்கில் விளையாடும்போது கிறிஸ் லின்னிற்கு முழங்கால் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கிறிஸ் லின் விலகியுள்ளதால் மேக்ஸ்வெல்லிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.