அம்பத்தி ராயூடுவிற்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; குரல் கொடுக்கும் முன்னாள் வீரர் !!

அம்பத்தி ராயூடுவிற்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; குரல் கொடுக்கும் முன்னாள் வீரர்

அம்பத்தி ராயூடுவை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யாதது மிகப்பெரும் அநீதி என ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் நேற்று முன்தினம் துவங்கியது. அபுதாபியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

அரைசதம் அடித்து கொடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்ட அம்பத்தி ராயூடுவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலரும் இவ்வளவு சிறப்பாக விளையாடக்கூடிய அம்பத்தி ராயூடுவிற்கு கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் இடம் கொடுக்காதது ஏன் என்ற கேள்வியை இந்திய அணியை நோக்கி எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், அம்பத்தி ராயூடு குறித்து பேசியுள்ள சென்னை அணியின் மற்றொரு சீனியர் வீரரான ஹர்பஜன் சிங், கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் அம்பத்தி ராயூடுவிற்கு நடைபெற்றது மிகப்பெரும் அநீதி என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் அது பத்தாது. கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது அம்பத்தி ராயூடுவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்காதது மிகப்பெரும் அநீதி என்றே கருதுகிறேன். நிச்சயமாக உலகக்கோப்பை தொடரில் அம்பத்தி ராயூடுவிற்கு இடம் கிடைத்திருக்க வேண்டும். அம்பத்தி ராயூடு தான் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மும்பை சென்னை இடையேயான முதல் போட்டி குறித்து பேசிய ஹர்பஜ சிங், சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை மனதார பாராட்டுகிறேன். குறிப்பாக பியூஸ் சாவ்லா மிகச்சிறப்பாக விளையாடினார், மிக குறைந்த ரன்களே விட்டு கொடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். சென்னை வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சின் மூலமே மும்பை இந்தியன்ஸ் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முடிந்தது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.