அடப்பாவிகளா… என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? அம்பலமான சூதாட்டம் !! வீடியோ

அடப்பாவிகளா… என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? அம்பலமான சூதாட்டம் !! வீடியோ

துபாயில் நடைபெற்ற உள்ளூர் கிரிகெட் போட்டி ஒன்றில் சூதாட்டம் நடைபெற்றது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் என்றாலே சூதாட்டம் தான் என்று பெரும்பாலானோர் சொல்வதுண்டு. ஒவ்வொரு தொடரிலும் சூதாட்டம் நடைபெறுகிறது என்ன பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டாலும், இதுவரை வெளிப்படையாக சூதாட்டம் நடைபெற்றது இல்லை.

குறிப்பாக ஐ.பி.எல் தொடர் அறிமுகமான பிறகு கிரிக்கெட் மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்டத்தி ஈடுபட்ட சில கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டனர், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு வருடம் தடை செய்யப்பட்டன.

மறைமுகமாக நடைபெற்ற இந்த சூதாட்டமே கிரிக்கெட் அரங்கில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது துபாயில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற அஜ்மான் ஆல் ஸ்டார்ஸ் தொடரில் இந்த சூதாட்டம் நடைபெற்றுள்ளது. எண்ணெய் வள நாடுகள் பல இந்த தொடரில் கலந்து கொண்டது. இது ஐ.சி.சி., மற்றும் துபாய் கிரிக்கெட் வாரியத்தால் அங்கிகரிக்கப்பட்ட போட்டியாகும்.

இந்த தொடரில் துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான போட்டியின் போது ஷார்ஜா வீரர்கள் வந்த ஈஷியாக விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியனர். இது குறித்தான வீடியோ வெளியானதன் மூலம் இந்த போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி., விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

வீடியோ;

இந்த போட்டி குறித்து சமூக வலைதளங்களில் பேசும் நெட்டிசன்கள் பலர் நீங்க சூதாட்டம் ஆடியதை கூட பொருத்து கொள்வோம், ஆனால் அதை இவ்வளவு வெளிப்படையாக செய்யாமல் கொஞ்சமாச்சு நடிக்க தெரியுதா உங்களுக்கு என்றே கிண்டலடித்து வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.