தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக்கின் 10வது தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது இந்த ஐபில் தொடர். இதன் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
அணிகள் விவரம்:
மும்பை இந்தியன்ஸ் – லெண்டல் சிம்மன்ஸ், பார்திவ் பட்டேல், ரோஹித் சர்மா, நிதிஸ் ராணா, ஹர்டிக் பாண்டியா, கிரண் பொல்லார்ட், கரண் சர்மா, ஹர்பஜன் சிங், மிட்சல் மெக்கலனகன், ஜேஸ்ப்ரிட் பும்ரா, லசித் மலிங்கா.
கிங்ஸ் XI பஞ்சாப் – மார்ட்டின் கப்தில், மனன் வோஹ்ரா, ஷான் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், வ்ரிதிமான் சஹா, அக்சர் பட்டேல், ராகுல் டெவடியா, மோஹித் சர்மா, மேட் ஹென்றி, இஷாந்த் சர்மா, சந்தீப் சர்மா.