ஜாலியாக இருக்கிறார், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சார் இப்போது ரொம்ப பிசி!.
கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டி காக்குடன் மோதலில் ஈடுபட்டார் டேவிட் வார்னர். இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இந்த சண்டை முடிந்து அடுத்த டெஸ்ட் போட்டி தொடங்கியதும் இப்படியொரு விவகாரம் விஸ்வரூம் எடுக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அது, ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம். டெக்னாலஜி இவ்வளவு முன்னேறிய பின்பும் பந்தை சேதப்படுத்தினார்கள் ஆஸி.வீரர்கள். இதில், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், இளம் வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் கையும் களமாவுமாகப் பிடிபட்டனர். காட்டிக்கொடுத்தது கேமரா.
மாட்டிக்கொண்ட அவர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னருக்கு ஒரு வருடமும் பேன்கிராப்ஃடுக்கு ஒன்பது மாதமும் விளையாட தடை விதித்தது. இதனால் ஸ்மித்தும் வார்னரும் ஐபிஎல் போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் டேவிட் வார்னர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
’நாங்க கனவு வீட்டைக் கட்டிக்கிட்டு இருக்கோம்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வார்னரின் மனைவி கேண்டிஸ். அதில் தொழிற்சாலைகளில் அணியும் ஷேப்டி தொப்பியை அணிந்துகொண்டு கட்டிட வேலையில் பிசியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் வார்னர். அவர்களின் குழந்தைகளும் அந்தப் பகுதியை பார்வையிட்டபடி இருக்கின்றன. அதற்கு, ‘தங்கள் பெட்ரூமை பார்வையிட்டு திரும்புகிறார்கள்’ என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் கேண்டிஸ்.
சிட்னி கடற்கரைக்கு அருகே உள்ள கழிமுகப் பகுதியில்தான் இந்த கனவு வீட்டை பிரமாண்டமாக கட்டி வருகிறார் வார்னர். காஸ்ட்லி ஏரியா இது. இப்போது அவர்கள் மவுரபா பகுதியில் வசித்து வருகின்றனர்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை ஆதரிப்பதற்கும் பிசிசிஐ தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிாிக்கெட் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்தவா் வாா்னா். ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிாிக்காவுக்கு எதிரான கிாிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மிகப்பொிய சா்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பந்தை சேப்படுத்திய விவகாரத்தில் அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வாா்னருக்கு கிாிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிாிக்கெட் சங்கம் ஒரு வருடத்திற்கு தடை வித்தது.