எங்ககிட்ட மட்டும் உங்க வித்தைய காட்டிறாதீங்க; ரசீத் கானிடம் புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் !!

எங்ககிட்ட மட்டும் உங்க வித்தைய காட்டிறாதீங்க; ரசீத் கானிடம் புவனேஷ்வர் குமார் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரின் போது மட்டும் ரசீத் கான் தனது வித்தையை காட்டிவிட வேண்டாம் என்று புவனேஷ்வர் குமார் விளையாட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 146 ரன்கள் எடுத்தது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது.

விராட் கோலி களத்தில் நிற்கும் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. விராட் கோலி 39 ரன்னிலும், ஏபி டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரன் அடிக்க திணறியது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஸ்குமார் அந்த ஓவரை வீசினார். மந்தீப் சிங், கொலின் டி கிராண்ட்ஹோம் என்ற சிறந்த பேட்ஸ்மேன்களால் 12 ரன்கள் அடிக்க முடியவில்லை. நேர்த்தியான யார்க்கர் பந்துகளால் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அத்துடன் கடைசி பந்தில் கிராண்ட்ஹோமை க்ளீன் போல்டாக்கினார்.

புவனேஸ்வர் குமாரின் நேர்த்தியான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை சிறப்பாக வீசக் காரணம் என்ன என்பதை புவனேஸ்வர் குமார் விளக்கியுள்ளார்.

Photo by: Deepak Malik / IPL/ SPORTZPICS

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் நெருக்கடியை பற்றி அதிக அளவில் சிந்திப்பேன் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு பந்தையும் நான் எப்படி வீச வேண்டும் என்பதில்தான் முழுக்கவனும் செலுத்துவேன். அதற்கான பலன் கிடைக்கும். நான் எப்போதும் வலைப்பயிற்சியில் யார்க்கர் பந்து வீசுவதில் கவனம் செலுத்துவேன். நீங்கள் வலைப்பயிற்சியில் என்ன பயிற்சி எடுக்கிறீர்களோ, அது ஆடுகளத்தில் வெளிப்படும்’’ என்றார்.

மேலும் போட்டியின் முடிவை தொடர்ந்து ரசீத் கானிடம் மைக்கில் பேசிய புவனேஷ்வர் குமார் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது மட்டும் நீங்கள் உங்கள் வித்தைகளை காட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விளையாட்டாக கூறினார், அதற்கு ரசீத் கானும் சிரித்து கொண்டே “இன்ஷா அல்லாஹ்” என்பதோடு முடித்து கொண்டார்.

Mohamed:

This website uses cookies.