அமிதாப் பச்சனுக்கு பிடித்த டி20 அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

தனக்கு பிடித்த டி20 அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியின் போது அவர் கமெண்ட்ரி செய்தார். அந்த வேளையில் இமத தகவலை கூறினார் அமிதாப்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லயினும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் 1 ரன்னுடன் வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.

அதன்பிறகு இறங்கிய உத்தப்பா வழக்கம் போல் தனது அதிரடியை தொடங்கினார். 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து சபீஷ் நாதிம் பந்தில் உத்தப்பா  அவுட் ஆனார். மறுபுறம் கிறிஸ் லயின் நிதானமாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி வந்தார். அவருடன் ரானா கைகோர்த்தார். இருவரும் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். கிறிஸ் லயின் 29 பந்துகளில் 31 ரன்களுடன் வெளியேறினார்.  ரானா  35 பந்துகளில் 59 ரன்கள் குவித்து  மோரிஸ் பந்தில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ரன் மெஷின் வீரரான ரஸ்ஸல் இன்றைய போட்டியில் 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். மைதானத்தின் அனைத்து திசைகளுக்கு அவர் அடித்த பந்து சிக்ஸராக பறந்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் காம்பீர் மற்றும் ஜேசன் ராய் சொற்ப ரன்களில் ஆடமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யரும் 4 ரன்களில் வெளியேற டெல்லி அணி தடுமாறியது.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது

ஆனால் பாண்ட் மற்றும் மேக்ஸ்வெல் சரிவிலிருந்து டெல்லியை மீட்டனர். பாண்ட் 26 பந்துகளில் 43 ரன்களும் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஆனால் அடுத்தெடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி தோல்வியை நோக்கிச் சென்றது.

14.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் தோல்வியைத் தழுவியது. அதன்படி 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Editor:

This website uses cookies.