ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 9 முறை ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு கனே வில்லியம்சின் ஹைதராபாத் அணி முதலாவதாக தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, 2வது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான 46வது லீக் போட்டியில், சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம் சென்னை அணி 9வது முறையாக ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி விளையாடிய 9 தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாறு;
ஆண்டு | |
2008 |
இறுதி போட்டியில் தோல்வி |
2009
|
இரண்டாவது அரையிறுதி போட்டியில் தோல்வி |
2010 | சாம்பியன் |
2011 | சாம்பியன் |
2012 | இறுதி போட்டியில் தோல்வி |
2013 | இறுதி போட்டியில் தோல்வி |
2014 | ப்ளேஆஃப் சுற்று மூன்றாவது. |
2015 | இறுதி போட்டியில் தோல்வி |
2016 | தடை |
2017 | தடை |
2018 | நடப்பு தொடர்* |