ஹைதரபாத்துடன் மோத உள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச ஆடும் லெவன் !!

ஹைதரபாத்துடன் மோத உள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச ஆடும் லெவன்

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் பெரும் வரவேற்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் களம் காண உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

1.சேன் வாட்சன்

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ஷேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

2.அம்பத்தி ராயூடு

அம்பத்தி ராயூடு ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சென்னை அணிக்கு மிகச்சரியாகவே செய்து வருகிறார். ஆனால் இவர் சிறிது அதிரடியாக விளையாடும் பட்சத்தில் பவர்பிளே ஓவர்களில் சென்னை அணி அதிக ரன்கள் குவிக்க உதவியாக இருக்கும்.

3.சுரேஷ் ரெய்னா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சுரேஷ் ரெய்னா நடப்பு தொடரிலும் 300 ரன்களை சாதனை படைத்தார். இன்றைய போட்டியிலும் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

  1. தோனி;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பாதையில் கம்பீரமாக வழிநத்தி வரும் தல தோனி, முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து அசத்தி வரும் தோனியின் அதிரடி இன்றைய போட்டியிலும் தொடரும் பட்சத்தில் ஹைதரபாத் அணிக்கு நிச்சயம் கடும் நெருக்கடி ஏற்படும்.

  1. சாம் பில்லிங்ஸ்;

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் தனது பங்களிப்பை சரியாக செய்த சாம் பில்லிங்ஸ் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மிடில் ஆர்டரிலும் சென்னை அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

  1. டூவைன் பிராவோ;

ஆல் ரவுண்டரான டூவைன் பிரவோ கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார். இன்றைய போட்டியிலாவது அவர் தனது பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

  1. ஜடேஜா;

கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்கு ஓரளவிக்கு கை கொடுத்து வரும் ஜடேஜா இன்னும் தனது பந்துவீச்சில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும்.

8.ஹர்பஜன் சிங்

அனுபவ சுழற்பந்து வீச்சளரான இவர் குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார்.

9., கரன் சர்மா;

ராஜஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக தோல்வியை சந்தித்ததால் இன்றைய போட்டியில் கரன் சர்மா அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

  1. ஷர்துல் தாகூர்;

கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு கிடைகாமல் தவித்து வந்த ஷர்துல் தாகூர் இன்றைய போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் அதிகம். இனியாவது அவர் சிறப்பாக விளையாட வேண்டும்.

11, லுங்கி நிகிடி;

கடந்த போட்டியில் சொதப்பிய டேவிட் வில்லேவிற்கு பதிலாக இன்றைய போட்டியில் லுங்கி நிகிடி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சில் இருக்கும் ஒரே நம்பிக்கை இவர் மட்டும் தான்.

Mohamed:

This website uses cookies.