பெங்களூர் vs டெல்லி; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?

பெங்களூர் vs டெல்லி; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன..? இன்றைய போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பன குறித்து இங்கு பார்ப்போம்.

இடம்; பிரோஷா கோட்லா மைதானம், டெல்லி

நாள்; மே 12

நேரம்; இரவு 8 மணி

டெல்லி டேர்டெவில்ஸ் அணி;

இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த கவுதம் காம்பீர் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகியதை தொடர்ந்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.

டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் நியமிக்கப்பட்டதற்கு பிறகு புத்துணர்சி பெற்ற டெல்லி அணி ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர், ப்ர்த்வி ஷா, விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது அபார ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகை மிரள வைத்து வருகின்றனர்.

என்ன தான் டெல்லி அணி பேட்டிங்கில் பலம் பெற்றிருந்தாலும் மோசமான பந்துவீச்சு காரணமாக டெல்லி அணி ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியடைந்து வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சிலும் சற்று கவனம் செலுத்தும் பட்சத்தில் வெற்றி பெறலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்;

கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 175+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பாதையில் கம்பீரமாக வழிநடத்தி கிரிக்கெட் புகழின் உச்சத்தில் இருக்கும் விராட் கோஹ்லிக்கு ஒவ்வொரு வருட ஐ.பி.எல் தொடரும் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வருகிறது.

நடந்து முடிந்துள்ள 10 வருட தொடர்களில் ஒரு தொடரில் கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. இன்றைய போட்டியிலாவது பெங்களூர் அணி வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

வெற்றி யாருக்கு..?

இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளும் பேட்டிங் வரிசையில் சம பலம் கொண்டவை, தவிர இன்றைய போட்டி நடைபெற உள்ள பிரோஷா கோட்லா மைதானமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்பதால் இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களின் வாணவேடிக்கைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். அதே வேளையில் இரு அணிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்புகள் உள்ளது.

Mohamed:

This website uses cookies.