கொல்கத்தாவில் மீண்டும் காம்பீர்; முதலில் பந்துவீசுகிறது டெல்லி !!

கொல்கத்தாவில் மீண்டும் காம்பீர்; முதலில் பந்துவீசுகிறது டெல்லி

ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி கொல்கத்தா இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் கடந்த 7ம் தேதி துவங்கி இந்தியாவின் பல பகுதிகளில் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய லீக் போட்டியில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்றுள்ள டெல்லி  அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான கொல்கத்தா அணியில் இருந்து ஜான்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டாம் குர்ரான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக கொல்கத்தா அணிக்காக விளையாடி அந்த அணிக்கு இரண்டு கோப்பைகளையும் வென்று கொடுத்த கவுதம் காம்பீர், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா மண்ணில் வேறு அணிக்காக விளையாட உள்ளார்.

இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணி;

ஜேசன் ராய், கவுதம் காம்பீர், ரிஷப் பண்ட், கிளன் மேக்ஸ்வெல், ஸ்ரேயஸ் ஐயர், விஜய் சங்கர், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேடியா, சபாஷ் நதீம், முகமது ஷமி, டிரண்ட் பவுல்ட்.

இந்த போட்டிக்கான கொல்கத்தா அணி;

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், அண்ட்ரியூ ரசல், சுப்மன் கில், சிவம் மாவி, டாம் குர்ரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ்.

 

Mohamed:

This website uses cookies.