முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் விலகல் !!

முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் விலகல்

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டூ பிளசிஸ் விலகியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த போட்டி துவங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் டூ பிளசிஸ் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த டூ பிளசிஸ் இந்த தொடரில் பங்கேற்பதே சந்தேகம் என்ற நிலை தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் டூ பிளசிஸ் இந்த தொடரில் பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால்,  டூ பிளசிஸிற்கு இன்னும் காயங்கள் முழுமையாக குணமடையாத காரணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து டூ பிளசிஸ் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஓரிரு போட்டிகளுக்குள் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என்றும் தெரிகிறது.

ஒருவேளை டூ பிளசிஸ் இந்த தொடரிலோ அல்லது ஒரு சில போட்டிகளில் விளையாடமல் விட்டால் அது சென்னை அணிக்கு நிச்சயம் பின்னடைவை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, கர்ன் சர்மா, சேன் வாட்சன், ஷர்துல் தாகூர், அம்பத்தி ராயூடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூ பிளஸிஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், நிகிதி, ஆசிஃப், ஜெகதீஷன், கன்சிக் செத், மோனு சிங், துருவ் சோரே, கிஷித் சர்மா, சைதன்யா பிசோனி.

Mohamed:

This website uses cookies.