ஐ.பி.எல் போட்டிகளை இனி இலவசமாக பார்க்கலாம்.. 36 நகரங்களில் பேன் பார்க் அறிமுகம் !!

ஐ.பி.எல் போட்டிகளை இனி இலவசமாக பார்க்கலாம்.. 36 நகரங்களில் பேன் பார்க் அறிமுகம்

ஐ.பி.எல் போட்டிகளை இலவசமாக பார்க்க 36 நகரங்களில் பேன் பார்க்கை பி.சி.சி.ஐ., அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக பேன் பார்க் என்னும் திட்டத்தை பி.சி.சி.ஐ., கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் பொிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு ஐ.பி.எல். போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

2018ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்று (சனிக் கிழமை) தொடங்கவுள்ள நிலையில், இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 19 மாநிலங்களில் 36 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 36 நகரங்களில் உள்ள முக்கிய மைதானத்தில் பொிய அளவிலான திரைகள் அமைக்கப்படும். அந்த திரையில் ஐ.பி.எல். போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஃபேன் பாா்க் முறை அறிமுகப்படுத்தப் படுகிறது. போட்டிகளை காணவரும் பெண்களுக்கும், சிறுவா்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிசிசிஐ யின் இந்த பேன் பார்க்  திட்டத்திற்கு ககிரிக்கெட் ரசிகா்கள் வெகுவாக வரவேற்பு தொிவித்துள்ளனா்.

மேலும் வரும் காலத்தில் இந்த திட்டத்தை மேலும் விாிவு படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் உத்தேச அணியை அறிய;

https://tamil.sportzwiki.com/cricket/ipl-2018-mumbai-indians-predicted-xi-against-csk/

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணியை அறிய;


https://tamil.sportzwiki.com/cricket/ipl-2018-chennai-predicted-xi-vs-mumbai-indians/

Mohamed:

This website uses cookies.