என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் : உச்ச நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா

கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

2015-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என ராஜ் குந்த்ரா உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டது.

Kundra and then ICC chief N Srinivasan’s son-in-law Gurunath Meiyappan were suspended from any type of cricket matches for life after they were found guilty of betting in the T20 tournament.
The Supreme Court-appointed committee in its 2015 verdict had also suspended former champions Chennai Super Kings and Rajasthan Royals for two years.

 

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல் போட்டியின்போது நான் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று டெல்லி போலீஸார் எனக்கு நற்சான்று பத்திரம் கொடுத்துள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவலைப் பெற்றுள்ளோம். எனவே என் மீது விதிக்கப்பட்டத் தடையை நீக்கவேண்டும் என்று அதில் ராஜ் குந்த்ரா கூறியுள்ளார். பின்னர் நிருபர்களிடம் ராஜ் குந்த்ரா நேற்று கூறும்போது, “சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியாது” என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது.

 

First talking of Warne, he is currently commentating in the ongoing Australia-South Africa series and will fly to India after the end of the Test match, which starts today (March 30).
Already, there is no clarity on his role in the team.
Reports, earlier, had suggested that he might leave the camp mid-way the tournament.
However, any news on this is yet to be confirmed.

இந்தச் செயலுக்கு கேப்டன் ஸ்மித்தும் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பு இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் விலகினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணி ஒருவருடம் விளையாடத் தடை விதித்ததையடுத்து ஸ்மித், வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, “கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை செய்த வார்னர், ஸ்மித் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு ஆட முடியாது, நாமும் அவர்களுக்குத் தடை விதிக்கிறோம். முதலில் ஐசிசி முடிவுக்காகக் காத்திருந்தோம், பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தற்போது நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
இந்த சீசனுக்கு அவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான மாற்று வீரர்களை அந்தந்த அணிகள் அறிவிக்கும். அவசரப்பட்டு நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை, நின்று நிதானித்தே முடிவெடுத்தோம்” என்றார்.

இந்நிலையில் தற்போது வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை அவருடைய அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 2015-ல் ஹைதராபாத் அணிக்குத் தேர்வானார் ஹேல்ஸ். எனினும் ஐபிஎல்-லில் இதுவரை விளையாடியதில்லை. இங்கிலாந்து வீரர்களில் சர்வதேச டி20 சதமெடுத்த ஒரே வீரர், ஹேல்ஸ்

Editor:

This website uses cookies.