இஷான் கிஷானிடம் மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்டியா !!

இஷான் கிஷானிடம் மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்டியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் ஹர்திக் பாண்டியா தூக்கிப் போட்ட பந்து தற்செயலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீக்கெட் கீப்பர் இஷான் கிஷன் முகத்தை பதம் பார்த்தது. இதற்கு ஹர்திக் பாண்டியா தற்போது தனது ட்விட்டர் பக்கம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மும்பை – பெங்களூரு இடையே ஐபிஎல் 14வது லீக் போட்டி கடந்த 17ம் தேதி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 167 ரன்கள் மட்டும் எடுத்து. 47 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது, 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கின் போது, பந்தை எடுத்து கீப்பர் இஷான் கிஷானிடம் எறிந்தார்.
ஆனால் அந்த பந்து மைதானத்தில் குத்தி தாறுமாறாக சென்று இஷான் கிஷானின் முகத்தில், அவரின் வலது கண்ணுக்கு அருகே பலமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் மருத்துவர்கள் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி கொடுத்து அழைத்துச் சென்றனர். மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்யா தாரே கீப்பிங் செய்தார்.

மைதானத்தில் பந்து குத்தி தவறுதலாக சென்று தாக்கியதற்கு இஷான் கிஷானிடம் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். “என் குட்டிப் பையா, நீங்கள் காயத்திலிருந்து மீண்டு வலுவாக வருவீர்கள்” என்றும் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

இஷான் கிஷானுக்கு ஏற்பட்ட காயத்தின் நிலை குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது, “ “இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே  விளையாடுவார், நாங்கள் அடுத்த போட்டியில் பங்கேற்க இன்னும் நான்கு தினங்கள் உள்ளதால் அது இஷான் கிஷான் குணமடைய போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன், அவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை” என்றார்.

பெங்களூர் அணியுடனான வெற்றி மூலம் தனது வெற்றி கணக்கை  துவங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

Mohamed:

This website uses cookies.