கிறிஸ் லின் நிச்சயம் விளையாடுவார்; கொல்கத்தா அணி நம்பிக்கை !!

கிறிஸ் லின் நிச்சயம் விளையாடுவார்; கொல்கத்தா அணி நம்பிக்கை

கிறிஸ் லின் மற்றும் ஜான்சன் அடுத்த சில இரு தினங்களுக்குள் கொல்கத்தா அணியில் இணைவார்கள் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின்னை இந்த முறையும் கொல்கத்தா அணியே 9.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

ஆனால், ஏலம் முடிந்த அடுத்த சில தினங்களில் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த கிறிஸ் லின், தொடரில் இருந்து விலகியதோடு, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார், மேலும் கொல்கத்தா அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஆண்ட்ரியூ ரசலும் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ரசல் மற்றும் கிறிஸ் லின் இந்த தொடரில் விளையாடுவார்களா..? மாட்டார்களா..? என்ற கொல்கத்தா ரசிகர்கள் கவலையில் உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே கிறிஸ் லின் மற்றும் ரசல் கொல்கத்தா அணியில் விளையாடுவார்கள் என்று கொல்கத்தா அணியின் CEO வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கி மைசூர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், கிறிஸ் லின் மற்றும் ஜான்சன் ஆகியோர் நலமாக உள்ளனர். அவர்கள் விமானம் ஏறிவிட்டு எங்களை தொடர்பு கொண்டனர். அவர்கள் இந்தியா வந்த பிறகு கொல்கத்தா அணியின் மருத்துவர்கள் அவர்களை பரிசோதிப்பார்கள், அதன் பின் இருவரும் நாளை நடைபெறும் பயிற்சியிலும் கலந்து கொள்வார்கள், பெங்களூர் அணிக்கு  எதிரான முதல் போட்டியில் இருந்தே இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மற்றொரு  நட்சத்திர வீரரான வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.