பஞ்சாப் அணியை பந்தாடுமா டெல்லி டேர்டெவில்ஸ்..? இரு அணிகளும் ஒரு பார்வை !!

பஞ்சாப் அணியை பந்தாடுமா டெல்லி டேர்டெவில்ஸ்..? இரு அணிகளும் ஒரு பார்வை

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று கோலகலமாக துவங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நிலையில், இன்று இரவு நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

பஞ்சாப் – டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் இரு அணிகளின் பலம் பலவீனங்கள் மற்றும் இரு அணிகள் இடையேயான பழைய வரலாறுகள் ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.

தேதி ; ஏப்ரல் 7

இடம்; பஞ்சாப் கிரிக்கெட் ஆசோசியேசன்; மொஹாலி

நேரம்; மாலை 4 மணி

பஞ்சாப் அணி;

பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிரபர்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி நடைபெறும் மொஹாலி மைதானமானது பேட்டிங்கிற்கு சாதமானது. கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், கே.எல் ராகுல், யுவராஜ் சிங் என அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன வீரர்கள் பலரை பெற்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான பின்ச் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக இளம் வீரர் மாயன்க் அகர்வால் பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதே போல் மிடில் ஆர்டரிலும் கருண் நாயர், டேவிட் மில்லர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். காயம் காரணமாக டெல்லி அணியில்  இருந்து ரபாடா விலகியிருப்பதும் பஞ்சாப் அணிக்கு சாதமாகமான விசயம் தான்.

டெல்லி டேர்டெவில்ஸ்;

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று தெரிகிறது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பஞ்சாப் அணிக்கு சரிக்கு சமமான பலத்துடனே டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் உள்ளது. கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கவுதம் காம்பீர் இந்த தொடரில் டெல்லி அணியை வழிநடத்த உள்ளது டெல்லி அணிக்கு கூடுதல் பலமே.

துவக்க வீரர்களாக கவுதம் காம்பீரும், கார்லின் முன்ரோவும் களமிறங்குவார்கள். இந்த துவக்க ஜோடியை பிரிப்பதே பஞ்சாப் வீரர்களுக்கு கடும் சவலாக இருக்கும், ஒருவேளை இவர்கள் சொதப்பினாலும் அடுத்தடுத்து ரிஷப் பண்ட், ஜேஸன் ராய், ஸ்ரேயஸ் ஐயர், விஜய் சங்கர், கிறிஸ் மோரிஸ், கிறிஸ்டியன் ஆகிய தலை சிறந்த வீரர்கள் பலரை டெல்லி அணி உள்ளடக்கியுள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

எதிர்பார்க்கப்படும் முடிவு..

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சமபலம் கொண்ட இரு அணிகள் மோத உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இருந்தாலும் இன்றைய போட்டியில் டெல்லி அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.