ஐபிஎல்11 : சென்னை – மும்பை!! ட்விட்டரில் கோலாகலம்! சென்னைக்கு 165 ரன் இலக்கு!

ஐபிஎல் 11-வது சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் சுண்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ‘ஹெட்’ என அழைத்தார். டோனி அழைத்தபடியே ‘ஹெட்’ விழ, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் இன்றுமுதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சஸ் மோதுகின்றன. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார். பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), 2. எவின் லெவிஸ், 3. ரோகித் சர்மா (கேப்டன்), 4. சூர்யகுமார் யாதவ், 5. பொல்லார்டு, 6. ஹர்திக் பாண்டியா, 7. குருணால் பாண்டியா, 8. பும்ரா, 9. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 10. மெக்கிளெனகன், 11. மயாங்க் மார்கண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

1. அம்பதி ராயுடு, 2. ஷேன் வாட்சன், 3. சுரேஷ் ரெய்னா, 4. கேதர் ஜாதவ், 5. டோனி (விக்கெட் கீப்பர் அண்டு பேட்ஸ்மேன்), 6. பிராவோ,

இந்த போட்டியில் வெற்றி  பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாயும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 8.75 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Editor:

This website uses cookies.