தற்போது இந்தியாவில் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதவுள்ளது.
இது வரை இரண்டு அணிகளுமே மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், தோல்வி எண்ணிக்கையை நிறுத்த போராடும் என எதிர்பார்க்க படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சில மாற்றங்களை செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஜூனியர் இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் சிவம் மவியை அணியில் இடம்பிடித்தார்கள். ஆனால், அவர்களை கொல்கத்தா அணி ஒழுங்காக உபயோகிக்கவில்லை.
ஜூனியர் இந்திய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் மேல் வரிசையில் விளையாடும் ஷுப்மன் கில், கொல்கத்தா அணிக்காக 7வது வரிசையில் இறங்கினார். இதனால், தடுமாறிய ஷுப்மன் கில் சொல்லிக்கொள்ளும் படி. அதே போல் புது பந்தில் அற்புதமாக வீசும் ஷுப்மன் மவி, நடு இன்னிங்சின் போது அந்த அளவிற்கு வீசமாட்டார்.
எதிர்பார்க்கும் அணி:
சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சிவம் மவி, பியூஸ் சாவ்லா, மிட்சல் ஜான்சன்
டெல்லி டேர்டெவில்ஸ்:
கொல்கத்தா அணியை போன்றே டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சில மாற்றங்களை செய்தது. கோலின் முன்றோவுக்கு பதில் ஜேசன் ராயும், கிறிஸ் மோரிஸுக்கு பதில் டேனியல் கிறிஸ்டியனும் அணியில் இடம் பிடித்தார்கள்.
முதல் இன்னிங்சின் கடைசி நேரத்தில் டேனியல் கிறிஸ்டின் அற்புதமாக வீசி ரன்னை கட்டுப்படுத்த, அதிக ரன் சேசிங் செய்யும் போது 90 ரன்னிற்கு அடித்து டெல்லி அணிக்கு முதல் வெற்றியை தேடி தந்தார்
எதிர்பார்க்கும் அணி:
கவுதம் கம்பிர், ஜேசன் ராய், ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின், விஜய் ஷங்கர், ராகுல் தேவடியா, ஷபாஸ் நதீம், ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி
எங்கு?
ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
எப்போது?
ஏப்ரல் 16, 2018 – 8 இரவு மணிக்கு
போட்டி கணிப்பு:
டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என எதிர்பார்க்கப்படுகிறது.